Monday, April 26, 2010

ஐ.பி.எல்.2010 கோப்பையை வென்றது சென்னை அணி

shockan.blogspot.com

ஐ.பி.எல். 2010 கிரிக்கெட் இறுதிப்போட்டியில் மும்பை அணியை 22 ரன்கள் வித்யாசத்தில் சென்னை அணி வென்றது.

பரபரப்பாக நடந்த இறுதி ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய சென்னை அணி மும்பை அணிக்கு 168 ரன்களை இலக்காக நிர்ணயித்தது. சென்னை அணியில் அதிகபட்சமாக 57 ரன்களை எடுத்து கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்த சுரேஷ் ரெய்னா, இறுதிப்போட்டிக்கான ஆட்டநாயகன் விருதினையும் பெற்றுக்கொண்டார்.

மும்பை அணியின் சார்பில் சச்சின் டெண்டுல்கர் அதிகபட்சமாக 48 ரன்கள் எடுத்தார். ஆனாலும் தொடக்கம் முதலே மும்பை அணியின் ரன் விகிதம் குறைவாகவே இருந்ததால் வெற்றியை நெருங்க போராடியது. இறுதியில் மும்பை அணி 144 ரன்கள் மட்டுமே எடுத்து 9 விக்கெட்டுகளை இழந்திருந்தது.

ஐ.பி.எல். 2010 தொடரில் அதிகபட்ச ஓட்டங்களைக் குவித்த சச்சின் டெண்டுல்கர் அதிக விக்கெட்டுகளை எடுத்த பிரவீன் ஓஜா ஆகியோருக்கு தனித்தனியே விருதுகள் வழங்கப்பட்டன.

No comments:

Post a Comment