Sunday, April 25, 2010

ஜெ. போட்ட பிரேக்! தே.மு.தி.க. மூவ்!


shockan.blogspot.com

""ஹலோ தலைவரே... .... அ.தி.மு.க ஏரியா சுறுசுறுப்பா இருக்குது.''

""27-ந் தேதி இந்தியா முழுக்க நடக்கப் போகும் பொதுவேலை நிறுத்தத்தில் அ.தி.மு.க.வும் பங்கேற்பதால், அதற்கான வேகம் இருக்கத்தானே செய்யும்!''

""இடதுசாரி கட்சிகளின் முயற்சியால்தான் இந்த பொதுவேலை நிறுத்தம் நடக்குது. அவங்களைப் பொறுத்தவரை காங்கிரஸ் அரசுக்கு எதிராகவும், பா.ஜ.கவுக்கு சம்பந்தமில்லாமலும் தேசிய அளவில் ஒரு போராட்டத்தை வலிமையா நடத்தணும்ங்கிறதுதான் நோக்கம். இந்த வேலை நிறுத்தத்தில் பல அமைப்புகளையும் கட்சிகளையும் கலந்துகொள்ளச் செய்யணும்ங்கிற கணக் கோடுதான் தோழர்கள் செயல்படுறாங்க. தமிழ் நாட்டில் அ.தி.மு.க, ம.தி.மு.க இரண்டு கட்சிகளும் வேலை நிறுத்தத்துக்கு ஆதரவா நிற்கிற நிலையில், தே.மு.தி.க.வையும் அழைக்கணும்ங்கிற விருப்பம் தோழர்களிடம் இருந்தது.''

""கூட்டணித் தலைவரான ஜெ.வின் அனுமதியில்லாமல் விருப்ப அழைப்பை விடுக்க முடியாதே?''

""ஆமாங்க தலைவரே... ... இது பற்றி ஜெ.விடம் சி.பி.எம், சி.பி.ஐ. நிர்வாகிகள் தொடர்புகொண்டு கேட்டிருக்காங்க. விஜயகாந்த் கட்சி என்றதுமே ஜெ. டென்ஷனாயிட்டாராம். அவரிடமிருந்து கோபமான வார்த்தைகள் வெளிப்பட, தோழர்கள் சைலன்ட். அதுபோல சசிகலாவிடமும், இனி விஜயகாந்த் மனைவி பிரேம லதாவிடம் எந்தப் பேச்சும் வேண்டாம்னு பிரேக் போட் டுட்டாராம் ஜெ. அவரோட கவனமெல்லாம் பொதுவேலை நிறுத்தத்திற்காக தமிழகம் முழுக்க அ.தி.மு.க சார்பில் விளக்கப் பொதுக்கூட்டங்கள் சிறப்பா நடக்கணும். அதில் கூட்டணிக் கட்சிகள், தொழிற்சங்கங்கள் எல்லாம் கலந்துக்கணும். அதன் மூலம் அ.தி.மு.க கூட்டணியை ஸ்ட்ராங்க் பண்ணனும்ங்கிறதுதான்.''

""இதுசம்பந்தமா போயஸ் கார்டனில் கூட ஆலோசனைக் கூட்டம் நடந்திருக்குது போலிருக்குதே!''

""21-ந் தேதியன்னைக்கு ஓ.பன்னீர் செல்வம், செங்கோட்டையன், ஓ.எஸ். மணியன் இவங்களையெல்லாம் கூப்பிட்டு ஜெ ஆலோசித்திருக்கிறார். பொதுவேலை நிறுத்த நாளில், அரசு பாதுகாப்புடன் பேருந்துகள், ரயில்கள் இயங்கும். கடைகளையும் திறந்துவைக்கச் சொல் வாங்க. கடைசியில் போராட்டம் பிசுபிசுப்புன்னு செய்தி வரும். அதனால, அந்த நாளில் தமிழகம் முழுக்க ஆர்ப்பாட் டம் நடத்தலாமான்னும், காலையில் வடசென்னை, மாலையில் நாகப்பட்டி னம்னு இரண்டு பாயிண்ட்டில், தான் பங்கேற்கலாமான்னும் ஜெ ஆலோசித் திருக்கிறார். அதற்கு முன்னாடி, பவுர்ணமி பூஜையை ஸ்பெஷலா நடத்திவிட்டு, மே 5-ந் தேதி முதல் மாவட்டவாரியாக கட்சி நிர்வாகிகளை சந்திப்பது பற்றியும் கார்டனில் ஆலோசிக்கப்பட்டிருக்குது.''

""முல்லைப்பெரியாறு அணை தொடர்பா உச்சநீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட குழுவில் பங்கேற்பதில்லைன்னு முதலில் முடிவெடுத்திருந்த தமிழக அரசு, இப்போது தனது பிரதிநிதியா உச்சநீதிமன்ற முன்னாள் நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணனை நியமித்திருக் கிறதே?''

""பிரதிநிதியை அனுப்புவதில்லைன்னு தி.மு.க பொதுக்குழுவின்போதே கலைஞர் அறிவித்தார். இதற்கு சில கட்சிகள் ஆதரவான நிலையையும் சில கட்சிகள் கடும் விமர்சனத் தையும் வைத்தன. உச்சநீதிமன்றத்துடன் சட்ட மோதல் ஏற்படலாம்னும் கருத்துகள் வெளிவந்தன. முல்லைப்பெரியாறு வழக்கில் தமிழக அரசின் வழக்கறிஞரா ஆஜரான பராசரனுக்கும் இந்த விவகாரத்தில் மாற்றுக் கருத்து இருந்ததை ஏற்கனவே நாம சொல்லியிருந்தோம். உச்சநீதிமன்றமும் தமிழக அரசு பிரதிநிதியை நியமிக்கணும்னு சொல்லி யிருந்தது. பராசரன் இதுபற்றி அரசாங்கத்திடம் வலியுறுத்தினார். இதையெல்லாம் அலசி ஆராய்ந்த முதல்வர், தமிழக அரசின் பிரதிநிதியா நீதிபதி ஏ.ஆர்.லட்சுமணனை நியமித்திருக் கிறார்.''

""தண்ணீர் பிரச்சினையில் உச்சநீதிமன்றம் தான் நியாயத் தீர்ப்பு வழங்கணும்ப்பா.''

""விஜயகாந்த் கட்சி நிலவரங்கள் பற்றி சொல்றேங்க தலைவரே.. ... அ.தி.மு.க தலைமை கதவடைத்திருப்பதால், காங்கிரஸ் தலைமை நோக்கிய பார்வை மறுபடியும் தே.மு.தி.க.வில் தீவிரமாகியிருக்குது. ராகுலை விஜயகாந்த் சந்திப்பதற்கான முயற்சிகளை பண்ருட்டி ராமச்சந்திரன் மும்முரமா மேற்கொண் டிருக்கிறார். விஜய காந்த்தோ கேப்டன் டி.வி.யின் மார்க்கெட் டிங் நிலவரத்தை உயர்த் துவதில் மும்முரமா இருக்கிறார். சித்திரை 1-ந் தேதியிலிருந்து ஒளி பரப்பைத் தொடங் கிய கேப்டன் டி.வி.யின் புரோகிராம்கள் எதுவும் இன்னும் பெரியளவில் ரீச் ஆகலை. ஆனாலும், விளம்பரங்களைப் பிடிச்சுத் தரும்படி கட்சியின் மா.செ.க் களுக்கு விஜயகாந்த்திடமிருந்து உத்தரவு வந்திருக்குது. அதனால, புரோகிராம் ஸ்லாட்டுகளை சில மா.செ.க்கள் எடுத்திருக்காங்க.''

""காங்கிரசோடு கூட்டணி அமைக்க தே.மு.தி.க முயற்சிக்கிற நிலையில், தி.மு.க.வோடு கூட்டணி கன்ஃபார்ம் ஆயிடிச்சின்னு கொங்குநாடு முன்னேற்றக் கழகம் தரப்பிலிருந்து தகவல் லீக் ஆகுதே?''

""போன எம்.பி. தேர்தலின்போது, மேற்கு மாவட்டங்களில் இரண்டு கழகங்களுக்கும் சவாலாக இருந்த கட்சிதான் கொங்கு நாடு முன்னேற்றக் கழகம். ஆனா, இப்ப அந்த நிலைமை இல்லை. கட்சி நிர்வாகிகள் சிலர் கம்பெனி நிர்வாகிகள்போல செயல்பட்டதாலதான் தற்போதைய நிலைமைன்னு கட்சிக்குள் ளேயே முணுமுணுப்புகள் கேட்குது. கொங்கு வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்த விடுதலைப்போராட்ட வீரர் தீரன் சின்னமலையின் பிறந்தநாளையொட்டி கடந்த வாரத்தில், அவரது சிலைக்கு துணைமுதல்வர் ஸ்டாலின் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார். அரசு மரியாதைகளுடன் தீரன் சின்னமலை பிறந்தநாள் விழாக்கள் கடைப்பிடிக்கப் பட்டன. இதெல்லாம் தங்களால் நடந்ததுன்னும், தி.மு.க.வுடன் அலையன்ஸ் பேசி 25 தொகுதிகளைக் கேட்டிருப்ப தாகவும், 15 தொகுதிகளை ஒதுக்க தி.மு.க உறுதி கொடுத்திருக்குதுன்னும் கொ.மு.க நிர்வாகிகள் சொல்றாங்க. அதாவது, கட்சியின் சரிவால் விலகிப் போய்க் கொண்டிருக்கும் தொண்டர்களை காப் பாற்றி வைக்கத்தான் இந்த பிரச்சாரமாம். தி.மு.க தரப்பில் கேட்டால், அப்படி எந்த கூட்டணி உடன்பாடும் இதுவரை ஏற்படலைன்னு சொல்றாங்க.''

""ஓ....''

""செம்மொழி மாநாட்டையொட்டி ஏப்ரல் 30-ந் தேதிக்குள் சென்னையில் உள்ள அனைத்து வணிக நிறுவனங்களின் பெயர்களையும் தமிழில் மாற்றணும்னு மேயர் மா.சுப்ரமணியன் கண்டிப் பான உத்தரவைப் பிறப்பித்திருந்தார். அதோடு, ஆங்கிலப் பெயர்களுக்கு இணையான தமிழ்ப் பெயர்களும் உருவாக்கப்பட்டு அந்தப் பட்டியலை சில வணிகர் சங்கங்களிடம் கொடுக்கப்பட்டி ருக்குது. வியாபாரிகளோ, இப்படி சங்கங்களிடம் கொடுப்பதால் பிரயோஜனமில்லை. 100 கடை களில் 10 கடைகள்தான் சங்கங்களில் உறுப்பினராக இருக்கும். மீதி 90 கடைகளின் உரிமையாளர்கள் தனித்து இருப்பார்கள். அவர்களுக்கும் விவரம் தெரியுற வகையில், டி.வி.யிலும் பத்திரிகையிலும் விளம்பரமா கொடுக்கணும்னு கோரிக்கை வைக்கி றாங்க. அதோடு, குடிமகன்களின் கோரிக்கையும் முக்கியமானது. டாஸ்மாக் கடைகளின் பெயர்ப் பலகைகளில், அரசு மதுபானக் கடைன்னு எழுதணும்ங்கிறதுதான் அவங்க கோரிக்கை.''

""போதையிலும் தமிழ் போதையா?''

""பிரபாகரன் தாயார் பார்வதியம்மாள் திருப்பி அனுப்பப்பட்டதைக் கண்டித்து, 22-ந் தேதியன் னைக்கு ம.தி.மு.க நடத்திய உண்ணா விரதத்தில் கலந்துகொள்ள, உணர் வாளர்கள் பலரையும் போனில் தொ டர்புகொண்டு அழைத்திருக்கிறார் வைகோ. பா.ம.க நிறுவனர் ராம தாசிடமும் வைகோ பேச, உண்ணா விரதத்தில் கலந்துகொள்ள முடியாத நிலைமையை அவரிடம் விளக்கி விட்டாராம் ராமதாஸ்.''

""ம்...''

""காங்கிரஸ் தலைவர் தங்கபாலு, தனக்கிருக்கிற தலைவலிகளோடு புதுசா இளைஞர் காங்கிரஸ்னு ஒரு தலைவலி உருவாகி யிருக்குதேன்னு யோசிக் கிறாராம். கடந்த வாரம், இளைஞர் காங்கிரசின் புதிய நிர்வாகிகள் சத்திய மூர்த்திபவனில் பொறுப் பேற்றுக்கிட்டாங்க. தன் முன்னிலையில் அவங்க ளோடு ஒரு பத்திரிகை யாளர் சந்திப்பை நடத் தணும்ங்கிறது தங்க பாலுவோட எண்ணம். இந்தத் தகவலை இளைஞர் காங்கிரஸ் தலைவர் யுவராஜுக்கு பாஸ் செய்தார். பவனிலேயே இருந்த யுவராஜோ, "எங்க நிர்வாகிகள் மீட்டிங் நடக்குது.வெயிட் பண்ணுங்க. மீட்டிங் முடிச்சிட்டு சொல்றேன்' என்று தகவல் சொல்லி அனுப்ப, தங்கபாலு படுஅப் செட்டாம். வாசன் ஆதரவாளரான யுவராஜையும் இளைஞர் காங்கிரஸ் டீமையும் எப்படி தன்னோட கட்டுப் பாட்டுக்குள் கொண்டு வருவதுன்னு சீரியஸா யோசிச்சிக்கிட்டிருக்காராம் தங்கபாலு.''

""நீங்களும் யோசிக்கிற மாதிரி, யூகிக்கிற மாதிரி நான் ஒரு தகவல் சொல்றேன். ராஜ்யசபாவில் எம்.பியாக இருக்கும் அந்த சிவப்புக் கட்சித் தோழர், தன்னோட செல்வாக்கைப் பயன்படுத்தி, மகன் பெயரில் 5-சி அளவுக்கு கடன் வாங்கியிருக்காராம். பொதுவுடைமை கட்சியின் எம்.பி.யா இருந்துக்கிட்டு, இப்படி தனிப்பட்ட முறையில் செயல்பட்டுக்கொண்டிருப்பது தவ றல்லவா, இதை அனுமதிக்க லாமான்னு கட்சியின் மாநிலத் தலைமை அலுவலகத்தில் குரல்கள் கேட்குது.''

No comments:

Post a Comment