Sunday, April 18, 2010
தி.மு.க. உள்கட்சி பூசல்...!
shockan
இந்த நெருக்கடியை கலைஞர் எப்படி சமாளிக்கப் போகிறார் என்று அவரது அரசியல் எதிரிகளும் எப்படியும் சமாளித்துவிடுவார் என்று அவரது அபிமானிகளும் எதிர்பார்ப்புடன் அலசிக் கொண்டிருக்கிறார்கள். தி.மு.க தலைவர் பதவிக்குப் போட்டி என்கிற கருத்து அழகிரியிடமிருந்து வெளிப்பட, அதைத் தொடர்ந்து ஸ்டாலின், கனிமொழியின் பேட்டிகள் வெளியாக, மீடியாக்களில் முன்னிலை பெற்றிருக்கிறது தி.மு.க.வின் உள்கட்சிப் போட்டி. இதை கலைஞர் ரசிக்கவில்லை என்கிறார்கள் அவரது மனம் அறிந்தவர்கள்.
பழுத்த அரசியல்வாதியான கலைஞர் தன் மன அழுத்தத்தை அத்தனை சீக்கிரமாக வெளிப்படுத்த மாட்டார். தனக்கு மிகவும் நெருக்கமான சிலரிடம் மட்டும் பேசுவார். அவர்களில் முன்வரிசையில் இருப்பவர் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி. கடந்த வாரத்தில் கலைஞரை வீரமணி சந்தித்தபோது, உள்கட்சி நிலவரம் குறித்து நீண்ட நேரம் இருவரும் பேசியிருக்கிறார்கள்.
தி.மு.க.வின் தாய்க்கழகமான தி.க., தற்போதைய நிலைமைகளை எப்படிப் பார்க்கிறது என்பது திராவிட அரசியல் களத்தில் மிகவும் முக்கியமானது. அண்ணாவின் மரணத்திற்குப்பிறகு, தி.மு.க தலைமைக்கு ஒரு போட்டி ஏற்பட்ட சூழலில், தி.க. தலைவரான பெரியார், திருச்சியிலிருந்து சென்னைக்கு வந்து தங்கி, தி.மு.க.வின் வலி மை சிதைந்து விடாமல் பாது காப்பதற்கான அறிவுரைகளை வெளிப்படை யாக வழங்கி னார்.
"தலைமைப் பதவிக்கு கருணாநிதி போட்டியிடப்போவதாக அறிவித்துவிட்டார். ஆகவே அவரைத்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். கட்சியின் தலைமைப் பதவியும் ஆட்சியின் தலைமைப் பதவியும் ஒருவர் கையில் இருந்தால்தான் எவ்விதத் தொல்லையும் இல்லாமல் எடுத்த காரியங்கள் நடக்கும். நெடுஞ்செழியனும் போட்டியிடப்போவ தாக அறிவித்திருக்கிறார். கட்சித் தலைமைப் பதவி போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட வேண்டும்.
போட்டியிருந்தால் அது பலவீனம்' என அறிக்கை வெளியிட்டார் பெரியார். தி.மு.க தலைமைப் பதவிக்கான போட்டியில் கடைசி நேர உடன்பாடு ஏற்பட்டு, கலைஞர் தலைவராகவும், நாவலர் பொதுச்செய லாளராகவும் தேர்வு செய்யப்பட்டதை அறிந்ததும், ""இந்த கட்சித் தேர்தலில் தி.மு.க உடைந்துவிடுமோ என்று கவலைப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆனால், தேர்தல் நல்ல முறையில் நடந்திருக்கிறது. இதனால் என் கவலை தீர்ந்துவிட்டது'' என்று சிதம்பரத் தில் நடந்த தி.க.மாநாட்டில் அறிவித்தார் பெரியார். அண்ணா சொன்ன கடமை, கண்ணியம், கட்டுப்பாடு இந்த மூன்றில், முதலிரண்டும் சற்று குறைந்தாலும் பரவாயில்லை. கட்டுப்பாடு என்பதுதான் கட்சிக்கு மிகவும் முக்கியம் என்றும் பெரியார் குறிப்பிட்டார்.
தி.மு.க.வின் தலைமைப் பதவியை மையமாக வைத்து தற்போது எழும் சர்ச்சைகள் தொடர்பாக தாய்க்கழகத்தின் தலைவரான வீரமணியிடமிருந்து வெளிப்பட்டுள்ள கருத்துகள் திராவிட இயக்கத்தவரால் கவ னத்துடன் பார்க்கப்படுகிறது.
"தி.மு.க.வின் முக்கியப் பொறுப் பாளர்களாக -பாசத்திற்குரிய நமது சகோ தரர்களின் கடமை என்ன? மிகப்பெரிய முதுகுத்தண்டுவட அறுவை சிகிச்சை செய்து, மீண்டு உழைக்கும் கலைஞரை மகிழ்விக்கச் செய்யும் வகையில் அவர்தம் சுமையை பகிர்ந்துகொண்டு முதல்வரை உற்சாகப்படுத்தும் வகையில் நடந்துகொள்வதுதானே! வேதனை யோடு சொல்கிறோம். கடந்த சில நாட்களாக வரும் செய்திகள் முதல்வரை அளவுக்கு அதிகமாகப் புண்படுத்தி நிம்மதி இழக்கச் செய்துவிடுமோ என்று நினைத்து நெஞ்சம் பதைக்கிறோம். பதறுகிறோம். திராவிடர் கழகம் தி.மு.க கூட்டணியில் இடம் பெற்றுள்ள அரசியல் கட்சி யல்ல. உறவும் உரிமையும் உள்ள தாய்க்கழகம்.
அய்யா தந்தை பெரியார் அவர்கள் சொன்னார்கள், தி.மு.க.வை யாராலும் எளிதில் வீழ்த்திட முடியாது. ஆனால், நீங்கள் ஒரு வருக்கொருவர் சண்டை போட்டுக்கொண்டு, கட்டுப்பாட்டைக் காப்பாற்றத் தவறினால், அதை யாராலும் காப்பாற்றவே முடியாது. தி.மு.க கெட்டியான பூட்டு. இதற்கு யாரும் கள்ளச் சாவி போடாமல் கவனமாகப் பார்த்துக் கொள்ள வேண்டும் என்றார். இது கல்லில் செதுக் கப்படவேண்டிய அறிவுரை. கட்டுப்பாடு தளர்ந்து வருகிற நிலை தென்படுகிறது.
கட்சித் தலைவரைத் தவிர வேறு எவரும் செய்தி ஏடுகளுக்கு, செய்தியாளருக்குப் பேட்டிகள் எதுவும் கொடுக்கவே கூடாது என்பது நமது வேண்டுகோள். அவர்களுக்குத் தீனியாக, அண்மையில் தி.மு.க.வின் இரண்டாம் நிலை தலைவர்கள் பேட்டிகள்-பதில்கள் என வெளிவருவது வேதனையாகும். பலம் வாய்ந்த ஒரு கட்சிச் சங்கிலியில் எது பலவீனமானப் பகுதி (weakest Link) என்று கருதி அதை முதலில் பலமிழக்கச் செய்து, பிறகு உடைக்கவே முயல்வர் இன எதிரிகள்.
கட்சித் தலைமையைத் தவிர செய்தி ஏடுகளில் பேட்டிகள் தேவையில்லை. ஆட்சி -தத்தம் துறை செய்திகள் இவைகளைக்கூட முதல்வர் அனுமதி யோடு அமைச்சர்கள் அறிவித்தலே சிறப்பானது. கட்டுப்பாட்டைக் குலைப்பதை எவ்வளவு காலத்திற்குத்தான் வேதனையோடு தலைவர் வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பார்? தலைவரின் பெருந்தன்மையை, பாசம் என்றோ; பலவீனம் என்றோ யாரும் கருதிவிடக்கூடாது. எத்தனையோ சோதனை களைச் சந்தித்த பொதுவாழ்வு அவருக்குரியது. 75 ஆண்டு பொது வாழ்வுடையத் தலைவருக்கு மன நிம்மதியை- மகிழ்ச்சியை அளிக்க வேண்டிய பொறுப்பாளர்கள், மன உளைச்சலைத் தரலாமா?
இளைதாக முள்மரம் கொள்க
களையுஞர்
கைகொல்லும் காழ்த்த விடத்து
(சின்னதாக இருக்கும்போதே முள்மரத்தை அகற்றி விடவேண் டும். வளர்ந்துவிட்டால் அதுவே ஆபத்தானதாகிவிடும்)என்பதை அறியாதவர் அல்லர் குறளோவியம் கண்ட கொள்கைத் தலைவர். நமக்குள்ள கவலையால் எழுதுகிறோம். வேறு உள்நோக்கம் இல்லை.'
-என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி வெளியிட்டிருக்கும் அறிக்கையை, உரிய நேரத்தில் தாய்ப்பாசத்துடன் வெளியிடப்பட்ட அறிக்கை என்று கலைஞர் மீதும் தி.மு.க மீதும் அக்கறை கொண்ட திராவிட இயக்கத்தவர்கள் சொல்கிறார்கள். புரிய வேண்டியவர்களுக்குப் புரியுமா?
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment