Wednesday, April 28, 2010

உலக சினிமா வரலாற்றில் முதல் படம்!


shockan.blogspot.com
27 வருடங்களுக்கு முன் தியாகராஜன் நடித்து வெள்ளிவிழா கண்டு, மிகப்பெரிய வெற்றியடைந்து ஒரு வருடத்துக்கு மேலாக ஓடிய படம்- "மலையூர் மம்பட்டியான்'.

தியாகராஜனுக்கு ஜோடியாக சரிதா, சில்க் ஸ்மிதா, ஜெயமாலினி நடிக்க, ஜெய்சங்கர், செந்தாமரை, சங்கிலிமுருகன் ஆகியோரும் அதில் நடித்தனர். 1983-ல் வெளியாகி வெற்றிகரமாக ஓடிய மலையூர் மம்பட்டியான், பல மொழிகளில் ரீமேக் செய்யப்பட்டது. தெலுங்கில் கிருஷ்ணம்ராஜுவும், கன்னடத்தில் அம்பரீஷும், இந்தியில் ரஜினி காந்தும் மம்பட்டியானாக நடித்தனர். இந்தியில் ரஜினிக்கு ஜோடியாக சரிகா நடித்தார். இப்படத்தில் நடித்த ரஜினிக்கு இந்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

27 வருடங்களுக்குமுன் பல மொழிகளிலும் சரித்திர சாதனையை நிகழ்த்திய மலையூர் மம்பட்டியான் படத்தை பிரசாந்த் கதாநாயகனாக நடிக்க மீண்டும் தமிழ், தெலுங்கு மொழிகளில் ஏராளமான பொருட்செலவில் மிகப் பிரம்மாண்டமாகத் தயாராகிறது.

இப்படத்தை தியாகராஜனே இயக்கி தயாரித்து வருகிறார். தான் கதாநாயகனாக நடித்த படத்தை தனது மகனை வைத்து அவரே இயக்கி தயாரிப்பது இந்திய சினிமா வரலாற்றில் மட்டுமல்ல; உலக சினிமா வரலாற்றிலேயே இதுவே முதன்முறையாகும்.

மம்பட்டியானாக பிரசாந்த் நடிக்க, அவருக்கு ஜோடியாக சரிதா நடித்த வேடத்தில் மீரா ஜாஸ்மினும், ஜெயமாலினி நடித்த வேடத்தில் முமைத்கானும், சில்க் ஸ்மிதா நடித்த வேடத்தில் இந்தி யில் கொடிகட்டிப் பறக்கும் முன்னணி நடிகையான மல்லிகா ஷெராவத்தும் நடிக்கிறார்கள். ஜெய்சங்கர் நடித்த போலீஸ் அதிகாரி வேடத்தில் பிரகாஷ்ராஜ் நடிக்க, கவுண்டமணி நடித்த வேடத்தில் வடிவேலு நடிக்கிறார்.

சங்கிலிமுருகன் நடித்த போலி மம்பட்டியான் வேடத்தில் ரியாஸ் கானும், செந்தாமரை நடித்த பண்ணையார் வேடத்தில் கோட்டாசீனிவாசராவும், அவருக்கு உதவியாளராக மனோபாலாவும், பிரசாந்தின் அப்பாவாக விஜயகுமாரும், அம்மாவாக "என்னுயிர்த்தோழன்' கதாநாயகி ரமாவும் நடிக்கி றார்கள். இவர்கள் தவிர கலை ராணி, ஹேமலதா என மிகப் பெரிய நட்சத்திரக் கூட்டமே நடிக்கும் மம்பட்டியான் படம் கடந்த ஒரு வருடமாக தயாராகி வருகிறது. ரிலீஸ் எப்போ?

No comments:

Post a Comment