Tuesday, April 27, 2010

தடுமாறும் தடகள வீராங்கனை சாந்தி



shockan.blogspot.com
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி செல்லும் சாலையில் பேருந்தே நிற்காத கத்தக்குறிச்சி என்னும் குக்கிராமத்தில் பிறந்து வறுமையின் பிடியில் வளர்ந்து, சத்துணவு, கூட இல்லாமல் பயிற்சி மேற்கொண்டு ஓடத் தொடங்கிய தேசிய அளவு போட்டிகளில் ஓடி 100க்கும் மேற்பட்ட தங்கம் வெள்ளி பதக்கங்களை பெற்று வந்தவர். படிப்படியாக தன் நிலையை உயர்த்திக் கொண்டார்.

இந்தியாவுக்காக விளையாட தொடங்கினார். பதக்கங்கள் குவிந்தது போல குடும்ப வறுமை நிலையும் வளர்ந்து கொண்டேதான் போனது. சத்தான உணவு மட்டுமில்லை பசியாறக்கூட குடும்பத்தினருக்கு உணவு கிடைக்காத சூழ்நிலையில் 2003ம் ஆண்டுக்கு பிறகு இந்தியாவுக்காக விளையாடத் தயாரானார்.






2003ம் ஆண்டு உலக சமாதானத்துக்கான ஓட்டப்பந்தயம் தென்கொரியாவில் நடந்தது. 5 ஆயிரம் மீட்டரில் ஓடி தங்கமும், 800 மீட்டரில் வெள்ளியும், 400 மீட்டரில் வெண்கலமும் வென்றவனர் தொடர்ந்து தனது உலகப் பயணத்தை தொடர்ந்தார்.

2005 ஆசிய தடகள போட்டியில் வெள்ளி, அதே ஆண்டில் இலங்கையில் நடந்த தெற்காசிய விளையாட்டுப் போட்டிகளில் 2 தங்கம், ஒரு வெள்ளியும் பெற்றவர். தாய்லாந்து சென்று தங்கம் வென்றார். தொடர்ந்து அதே ஆண்டில் பல வெள்ளிகளைப் பெற்றார். 2006ம் ஆண்டு ‘தோகா’வில் நடந்த ஆசிய விளையாட்டுப் போட்டியில் வறுமையை நினைத்து தலைதெரிக்க 800 மீட்டரில் ஓடினார். இந்த ஓட்டம் திருப்புமுனையாக இருக்கும் என்று நினைத்தார்.

நூலிலையில் தடுமாற்றம் வெள்ளியை பரிசாக கொடுத்தது. வாழ்வின் உச்சத்தை தொட்டு வறுமை அகழ்வது போல கனவு கண்டார். அந்த கனவு அடுத்த நாள்வரை நீடிக்கவில்லை.

போட்டிகளை நடத்திய அமைப்பு அடுத்த நாள் நடந்த போட்டியில் சாந்தியை கலந்து கொள்ள விடாமல் தடுத்தது.



மருத்துவ பரிசோதனை செய்ய வேண்டும் என்றதுடன் ஊருக்கு போகலாம் என்றது. சென்னை வரும் போது மற்றொரு பேரிடி விழுந்து நிலைகுலைய வைத்தது. நிலைகுலைந்து சாந்தி முதல்வர் கலைஞரை சந்திக்க சென்றார். ஆறுதலாக பேசிய முதல்வர் சாந்தி ஏனம்மா கவலைப்படறே உன்னை யாராவது ஏதாவது சொன்னா என்கிட்ட சொல் நான் பாத்துக்கிறேன் என்று ஆறுதலுடன் கூடிய தேறுதல் வார்த்தைகள் நிலைகுலைந்த சாந்தியை நிமிரச் செய்தது. கூடவே ரூ.15 லட்சம் பரிசும், ரூ.1.30லட்சம் மதிப்பில் டி.வியும் கொடுத்தார். பல்வேறு நிறுவனங்கள் பரிசும், பதவியும் தருவதாக அறிவித்தது.






சாந்தி ஊருக்கு வரும் முன்பே வீட்டில் டி.வி.ஓடத்தொடங்கியது. அதன் பிறகு சாந்திக்கு ஆண் தன்மை கூடுதலாக உள்ளது என்று ஆசிய விளையாட்டு வாரியம் அறிவித்து பதக்கம் பறிப்பு அறிவிப்பை வெளியிட்டது.

தொடர்ந்து ஒலிம்பிக்கில் ஓடி தங்க மங்கையாக வேண்டும் என்ற எண்ணம் ஈடேறவில்லை. இந்திய விளையாட்டு ஆணையமும் சாந்தியை கண்டுகொள்ளாமல் விட்டுவிட்டது. பரிசும், பதவியும் அறிவித்த நிறுவனங்களும் கை விட்டுவிட்டது.

இந்த நிலையில் தான் முதல்வர் கலைஞர் சாந்தியை அழைத்து தற்காலிகமாக தடகள பயிற்றுனராக ரூ.5,000 சம்பளத்தில் பணியை கொடுத்தார். இந்த பணி மேலும் ஆறுதலாக அமைந்தது சாந்திக்கு.

புதுக்கோட்டை விளையாட்டு அரங்கத்தில் 80 மாணவ, மாணவிகளுக்கு பயிற்சி கொடுக்க தொடங்கிய சாந்தி அவர்களில் பலரை இன்று மாவட்ட, மாநில, தேசிய தடகள வீரர், வீராங்கனைகளாக உயர்த்தி பதக்கம் பெற வைத்துள்ளார்.

மேலும் பி.டி.உஷா போல தானும் தனியாக 8 வீரர்களை தேர்வு செய்து உணவு, உடை, தங்குமிடம் கொடுத்து பயிற்சியும் தன் சொந்த செலவு செய்து வந்தார். தான் வாங்கும் ரூ.5000 சம்பளம் போதுமானதாக இல்லாததால் தனது சொந்த பயிற்சி மையத்தை மூடவேண்டிய நிலை வந்தது.

புதுக்கோட்டையில் வாடகை வீட்டில் தங்கிக் கொண்டு காலை 5 மணி முதல் விளையாட்டு மைதானத்தில் பயிற்சி கொடுத்து வருவதால் தனக்கும், தன் மாணவர்களுக்கும் இன்று வரை பயிற்சிக்கான சத்தான உணவு கிடைக்கவில்லை. மேலும் தற்காலிக பணியில் சேர்ந்து 2 ½ ஆண்டுகள் முடிந்த நிலையிலும் எனக்கு நிரந்தர பணி கிடைக்காததால் வாங்கும் ரூ.5000 சம்பளம் போதுமானதாக இல்லை என்றும் முதல்வர் கலைஞருக்கும், துணை முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கும் தனக்கு நிரந்தர பணி கிடைத்தால் என் குடும்ப வறுமை போகும்.

மேலும் புதுக்கோட்டையில் விளையாட்டு வீரர் வீராங்கனைகள் தங்கி பயிற்சி பெறவும், சத்தான உணவு கிடைக்கவும் வழி செய்தால் சிறந்த வீரர், வீராங்கனைகளை உருவாக்கி பெயர் வாங்கித் தருவேன் என்றும் கோரிக்கை மனு அனுப்பி காத்திருக்கிறார்.

கோரிக்கை மனு அனுப்பியிருப்பது அறிந்து சாந்தியை சந்திக்க மாவட்ட விளையாட்டு மைதானத்தில் பயிற்சி கொடுத்து கொண்டிருந்த சாந்தி,

’’என்னோட வறுமை பற்றியும், குடும்ப நிலை பற்றியும் எல்லாருக்குமே ரொம்ப நல்லாவே தெரியும். முதல்வருக்கு ரொம்ப நல்லாவே தெரியும். முதல்வருக்கு ரொம்ப நல்லாவே தெரியும். அதனாலதான் எனக்கு ஆறுதல் சொன்னதோட பணமும், பரிசும் கொடுத்தார். இது தான் எனக்கு கிடைச்ச பெரிய பரிசா நினைக்கிறேன்.

முதல்வரோட ஆறுதல் வார்த்தைகள் தான் என்னை தொடர்ந்து பயிற்சியாளரா நீடிக்க முடிஞ்சிருக்கு. கூடவே எனக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தடகள பயிற்சியாளராகவும் என்னை தற்காலிக பணிக்கு ரூ.5000 சம்பளத்தில் நியமித்தார். எல்லாத்துக்கும் நன்றி சொல்ல கடமைப்பட்டுள்ளேன்.

நான் வெற்றி பெற்ற செய்தி வெளியான நாளில் என் வீட்டில் அந்த காட்சியை பார்க்க முடியல. டி.வி.இல்ல. அதனால தான் முதல்வர் நான் வரும் முன்னால வீட்டுக்கு டி.வி. தந்தார்.

வெற்றி செய்தியை கேட்ட பல நிறுவனங்கள் எனக்கு ரூபாய் பல லட்சம் பரிசும், உயர்ந்த பதவியும் தர்றோம்னு விளம்பரத்துக்காக அறிவிச்சாங்க. ஆனா பதக்கம் பறிக்கப்பட்டதாக அறிவிப்பு வெளியானதும் அந்த நிறுவனங்கள் காணாமல் ஓடிப் போய்விட்டது. அந்த நேரம் முதல்வர் கலைஞர் மட்டும் தான் ஆறுதலாக இருந்து எப்ப வேணும்னாலும் வந்து பாருமான்னு சொன்னார்.

இப்ப என்னோட மாணவர்களில் 8 பேருக்கு தனியா என் சொந்த செலவுல பயிற்சி கொடுத்தேன். தங்கி பயிற்சி பெற செய்தேன். வசதி போதல இப்ப விளையாட்டு அரங்கில் 80 பேருக்கு பயிற்சி தர்றேன். என்னோட மாணவர்கள் இப்ப தேசிய அளவுலயும் பதக்கம் வாங்கி இருக்காங்க. இன்னும் கொஞ்க நாள்ல இன்னும் உயர்த்துவேன். அதுக்கு போதுமான உணவு இல்லை.

முதல்வரய்யாவும், துணை முதல்வரும் சத்தான உணவுடன் கூடிய விடுதி கொடுத்தால் ரொம்ப நல்லா இருக்கும்.மாணவர்களுக்கு பயிற்சி கொடுக்க எங்க ஊர்ல இருந்து அதிகாலை வரமுடியல. அதனால புதுக்கோட்டையிலயே வாடகை வீட்ல தங்கிட்டேன். போதுமான வருமானம் இல்லை. அதனால எனக்கு இந்த வேலையை நிரந்தரமாக்கி தர வேணும்னு முதல்வர்கிட்ட மனு கொடுக்க போனேன். கீழேயே வாங்கிகிட்டாங்க. நேரா பார்க்க முடியல. துணை முதல்வர் ஸ்டாலினுக்கும் கோரிக்கை மனு கொடுத்திருக்கேன்’’என்று தெரிவித்தார்.

சாதனை நிகழ்த்திய தமிழச்சி சாந்தியின் எதிர்காலத்தை நிர்ணயிப்பாரா முதல்வர்?

1 comment:

  1. How can we help Shanthi? I commend her efforts

    ReplyDelete