Tuesday, April 20, 2010

டாப் ஹீரோ... ஒன் 'சி'-இது தமன்னாவின் கண்டிஷன்!


shockan.blogspot.com

நம்மைப் போன்ற சாதாரண ஆட்கள்தான் ஆயிரம் என்றும் லட்சம் என்றும் 'அல்பமாகப்' பேசுவார்கள்... ஆனால் பெரிய இடங்களில், குறிப்பாக ரியல் எஸ்டேட் மற்றும் சினிமா வட்டாரங்களில் எல், சி என்று ஏபிசிடியில்தான் பணத்தை அபாரமாகக் கணக்கிடுவார்கள்!

இந்த அபார ஆசாமிகள் பட்டியலில் லேட்டஸ்ட் வரவு தமன்னா. இப்போதெல்லாம் தனது சம்பளத்தையே சி-யில் தான் கேட்கிறாம்.

சி? அதாங்க... கோடி!

கேடியில் நடிக்க வந்தபோது தமன்னாவுக்கு சம்பளம் வெறும் 2 லட்சம். அதுவும் தமிழ்-தெலுங்குக்கு சேர்த்து.

அதன்பிறகு தமிழில் சீண்ட ஆளில்லை. மீண்டும் கல்லூரி படத்துக்காக ரூ 5 லட்சம் கொடுத்து கூட்டி வந்தார்கள். அந்தப் படம் ஓடாவிட்டாலும் நல்ல பெயரைப் பெற்றுத் தந்தது.

அடுத்து அயன் படத்துக்காக 7 லட்சம் வாங்கிய தமன்னா, அந்தப் படம் பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டாகிவிட, அப்படி அரை கோடிக்கு உயர்த்தினார் சம்பளத்தை, தொடர்ந்து படிக்காதவன், இப்போது பையா என படங்கள் வெளியாகியதில், தனது ரேஞ்ச் எங்கோ போய்விட்டதாக நம்பிக் கொண்ட தமன்னா இப்போது ஒரு கோடிக்குக் குறைவான சம்பளமென்றால் ஏற இறங்கப் பார்த்துவிட்டு உதட்டைப் பிதுக்குகிறாராம்!

அதுமட்டுமல்ல, முன்னே பின்னே இருந்தாலும், மார்கெட்டில் ஓடும் ஐந்தாறு 'குதிரைகள்'தான் தனக்கு ஜோடியாக வரவேண்டும் என்ற மெகா கண்டிஷனையும் சேர்த்துக் கொள்கிறாராம். இந்தக் 'குதிரைகள் லிஸ்டி'ல் தனுஷுக்கு நிரந்தர இடமாம்!

No comments:

Post a Comment