நான் ஆண் அல்ல என்று நித்யானந்தா வாக்குமூலம் அளித்ததையடுத்து அவர் ஆணா, பெண்ணா என்பதை அறியும் பாலின சோதனையை நடத்த கர்நாடக போலீஸார் தீர்மானித்துள்ளனர்.
கடந்த 21ம் தேதி கைது செய்யப்பட்ட நித்தியானந்தாவிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.
விசாரணைக்கு அவர் சரிவர ஒத்துழைக்காமல் இழுத்தடித்து வருகிறார். அவரிடம் இத்தனை நாட்களாக நடந்த விசாரணையில் ரஞ்சிதா இருப்பிடத்தைத் தெரிவித்ததுதான் முக்கியமான திருப்பமாகும்.
இன்றுடன் நித்தியானந்தாவின் காவல் முடிவடைகிறது. இதையடுத்து அவரை ராம்நகர் கோர்ட்டில் சிஐடி போலீஸார் ஆஜர்படுத்துகின்றனர்.
இந் நிலையில் நான் ஆணே அல்ல என்றும், இதனால் நான் யாரையும் கற்பழிக்கவில்லை என்றும் போலீசாரிடம் நித்யானந்தா வாக்குமூலம் தந்தார்.
இதையடுத்து அவர் ஆணா, பெண்ணா என்பதைக் கண்டறியும் பாலினச் சோதனை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
நீதிமன்றத்தில் அவரை ஆஜர்படுத்தி அதற்கான அனுமதியைக் கோரி போலீசார் மனு தாக்கல் செய்யவுள்ளனராம்.
இதற்கிடையே, இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் கோரி ராம்நகர் மாவட்ட அமர்வு நீதிமன்றத்தல் நித்தியானந்தா தாக்கல் மனு மீது நேற்று விசாரணை நடைபெற்றது.
போலீஸ் விசாரணைக்கு ஒத்துழைக்க தொடர்ந்து நித்தியானந்தா மறுத்து வருவதால், ஜாமீன் வழக்குவதற்கு அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து நித்தியானந்தாவின் ஜாமீன் மனு மீதான விசாரணை மே மாதம் 3ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
இதே நீதிமன்றத்தில் சந்தனக் கட்டைகளை ஆசிரமத்தில் பதுக்கிய வழக்கில், தம்மை கைது செய்யாமல் இருக்கக் கோரி நித்தியானந்தா தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு மீதான விசாரணையும் நடைபெற்றது. பின்னர் அது இன்றைக்கு ஒத்திவைக்கப்பட்டது.
இதற்கிடையே, ஆசிரமத்தின் சொத்து விபரங்கள் தொடர்பான சில தகவல்களை நித்தியானந்தா கூறியதாக கர்நாடக போலீஸ் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. மேலும் கர்நாடக போலீசின் தணிக்கை பிரிவைச் சேர்ந்த 10 பேர் கொண்ட குழு நித்தியானந்தா ஆசிரமத்தின் சொத்து விவரங்கள் தொடர்பாக விசாரணையை நடத்தி வருகிறது.
நித்தியானந்தா ஆசிரமத்தின் பெயரில் 10 வங்கிகளில் ரூ. 35 கோடி பணம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. மேலும் நித்தியானந்தா ஆசிரமத்தின் கடந்த 8 ஆண்டுகால வரவு செலவுகளையும் தணிக்கை குழு ஆராய்ந்து வருகிறது. இதில் நித்தியானந்தா உல்லாசமாக இருக்க மட்டும் ஒரு ஆண்டுக்கு பல கோடி ரூபாய் செலவழித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
No comments:
Post a Comment