Sunday, April 18, 2010

கேபிள் சாம்ராஜ்யத்தில் யுத்தம்!


shockan.blogspot.com

தமிழக கேபிள் சாம்ராஜ்யம் மீண்டும் ஒரு முறை பரபரப்பாகி இருக்கிறது!

சித்திரை 1-ம் தேதி அண்ணா நகரில் மத்திய அமைச்சர் அழகிரி தொடங்கி வைத்த ஜேக் கம்யூனி கேஷன்ஸ் நிறுவனத்தின் எம்.எஸ்.ஓ. புதிதாக சென்னை மாநகர எல்லையில் கால் பதிக்க உள்ளது. மத்திய அமைச்சர் தயாநிதி மாறன் குடும்பத்தின் எஸ்.சி.வி. தனிப்பெரும் நிறுவனமாக சென்னையில் இயங்கி வரும் நிலையில் ஜேக் உதயமாகியிருக்கிறது. புதிய நிறுவனத்தின் இரண்டு இயக்குனர்களில் ஒருவராக அழகிரியின் மகன் துரை தயாநிதி பொறுப் பேற்றுள்ளதால் இந்த விவகாரம்... கேபிள் வட்டாரத்தில் பரபரப்பாக பேசப்படுகிறது. தயாநிதி மாறனுக்கு ஆதரவாக துணை முதல்வர் ஸ்டாலின் இருப்பதாக சொல்லப்படுவதும் இந்த விவகாரத்தில் கூடுதல் முக்கியத்துவத்தை கொடுத்துள்ளது.

ஜேக் கம்யூனிகேஷன்ஸ் எம்.எஸ்.ஓ.வை அழகிரி தொடங்கி வைக்கப்போவதாக செய்தி வந்த உடனேயே சம்பந்தப்பட்டவர்களோடு பேச்சு வார்த்தையை தொடங்கியது எஸ்.சி.வி. ஆனால் பேச்சுவார்த்தை களில் சமரச முடிவு எதுவும் வரவில்லை. இந்த நிலையில் அழகிரியின் நண்பரும் ஜேக் நிறுவனத்தின் தலைவருமான ஜெயராமனுடன் தயாநிதி மாறனே பேசியிருக்கிறார். அவ ரிடமும் பிடிகொடுக்காமல் ஜெயராமன் பேச... ""என் தம்பியை (அழகிரி மகன் துரை தயாநிதியைத்தான் இப்படி சொல்கிறார்) வைத்தே எங்களுக்கு எதிராக கூர்சீவப் பார்க்கிறீங்களா?'' என்று கூறியிருக்கிறார் அமைச்சர் தயாநிதி. ஆனால், கலைஞர் குடும்பத்தின் சீனியர்கள் பேசியும் ஜேக் எம்.எஸ்.ஓ.வைத் திறந்து வைப்பதில் தீவிரமாக இருந்தார் அழகிரி.

புதிய பிசினஸ் தொடங்கிய மகிழ்ச்சி யில் இருந்த துரை தயாநிதி, ""மக்களுக்கு நல்ல சேவையைக் கொடுக்க வேண்டும் என்பதே எங்கள் நோக்கம். ஆரோக்கியமான போட்டியால் வாடிக்கையாளர் களுக்கு பயன் கிடைக்குமே? நாங்கள் நிச்சயம் வெற்றி பெறுவோம்'' என உற்சாகமாக சொன்னார்.

பெரிய புள்ளிகள் போட்டி போடும் அளவிற்கான கேபிள் சாம்ராஜ்யத்தில் யார் கொடி பறக்கிறது?

""சென்னையில் மட்டும் 18 லட்சம் இணைப்புகள் இருக்கின்றன. இந்தியன் ரீடர்ஷிப் சர்வேயின் 2009-ம் ஆண்டு கணக்குப்படி தமிழகம் முழுவதும் ஒரு கோடி இணைப்புகள் கொடுக்கப்பட்டி ருக்கின்றன. இலவச தொலைக்காட்சி கொடுக்கப்பட்ட பிறகு இந்த எண்ணிக்கை மேலும் பல லட்சங்கள் கூடியிருக்கின்றன. தமிழகத்தின் மொத்த கேபிள் மார்க்கெட்டில் எஸ்.சி.வி.யிடம் சுமார் 50 சதவீத இணைப்புகள் இருக்கின்றன. தமிழக எம்.எஸ்.ஓ. அசோசியேஷன் அமைப்பில் இடம்பெற்றுள்ளவர் களிடம் 35 சதவீத இணைப்புகள் உள்ளன. இந்த அசோசியேஷனை கடந்த அக்டோபரில் நுங்கம் பாக்கத்தில் அழகிரிதான் தொடங்கி வைத்தார். எஞ்சியிருக்கிற 15 சதவீத இணைப்புகள் தமிழகம் முழுவதும் உள்ள கிராமப்புறங்களை சேர்ந்த 600 ஆபரேட்டர்களிடம் உள் ளன''’என்று மார்க்கெட் நில வரத்தை விளக்கினார்கள் நீண்ட நாள் ஆபரேட்டர்கள்.

""சென்னை, கோவை, மதுரை, நெல்லை, தஞ்சை ஆகிய 5 இடங்களிலும் எஸ்.சி.வி.தான் கேபிள் இணைப்புகளை கொடுத் துள்ளது. தமிழ்நாடு எம்.எஸ்.ஓ. அசோசியேஷனில் அங்கம் வகிக்கும் ஜேக் நிறுவனம் திருவள்ளூர், காஞ்சிபுரம், வேலூர் மாவட்டங்களி லும், அழகிரியின் ஆர்.சி.வி. மதுரையின் பாதி இடங்களிலும், பாலிமர் நிறுவனம் சேலம், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களிலும், முன்னாள் அமைச்சர் ராஜாவின் கிங் கேபிள் ஈரோடு பகுதியிலும், மத்திய அமைச்சர் காந்தி செல்வனின் கேபிள் நிறுவனம் நாமக்கல் மாவட்டத்திலும், ஆகாஷ் கேபிள் நிறுவனம் கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை மாவட் டங்களிலும் இணைப்புகள் கொடுத்திருக்கிறார்கள்'' என கேபிள் சாம்ராஜ்ய ஆளுகை பற்றியும் விவரித்தார்கள் ஆபரேட்டர்கள்.

இவற்றில் சென்னைதான் பெரிய மார்க்கெட் என்பதால் அங்கே காலூன்ற விரும்புகிறது ஜேக். சென் னையில் கேபிள் இணைப்பு கொடுக்கும் உரிமையை எஸ்.சி.வி. தவிர, ஹாத்வே, அரசு கேபிள், இண்டஸ் இண்ட், ஜேக் ஆகிய நிறுவனங்கள் பெற்றிருக் கின்றன. ஹாத்வே கடந்த ஆண்டு தன்னுடைய சென்னை அலுவலகத்தை மூடிவிட்டது. மற்ற இரண்டு பேரும் பிசினசை தொடங்கவே இல்லை . 2008-ம் ஆண் டில் லைசென்ஸ் பெற்ற ஜேக் இப்போது எஸ்.சி.வி.யின் மார்க்கெட்டை பிடிக்க தீவிரமாக கள மிறங்கியிருக்கிறது. வாடிக்கையாளர்களிடம் பெறப்படும் 100 ரூபாயில் 50 ரூபாய் லோக்கல் ஆபரேட்டருக்கு போய்விடும். 30 ரூபாய் கட்டண சேனல்களுக்கு போய்விடும். எஞ்சியிருக்கும் 20 ரூபாய்தான் எம்.எஸ்.ஓ.க்களுக்கு கிடைக்கும். மாதாந்திர வருமான வருவாயைத் தவிர கேபிள் டி.வி.யின் முதல் 50 இடங்களுக்குள் இடம் பிடிக்க சேனல்கள் கோடிக்கணக்கில் எம்.எஸ்.ஓ.க்களுக்கு கொட்டி கொடுக்கும். அப்படி வருகிற வருவாயே ஆண்டுக்கு 100கோடிக்கு மேல் இருக்கும். நிகழ்ச்சிகளின் டி.ஆர்.பி. ரேட்டிங்கை கணக்கிடும் டேம் மீட்டர்கள் சென்னை, கோவை, மதுரை உள்ளிட்ட 5 நகரங்களில்தான் பொருத்தப்பட்டிருக்கும். இந்த நகரங்களைத் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்கவே எம்.எஸ்.ஓ.க்கள் விரும்புவார்கள். அதனால்தான் சென்னையில் ஜேக் கேபிள் தொடங்குவதை எஸ்.சி.வி. விரும்பவில்லை என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

எஸ்.சி.வி. தரப்பிலோ, ""இதற்கு முன்பும் எங்களுக்கு அரசியல் ரீதியான நெருக்கடிகள் கொடுக்கப்பட்டன. அப்போதும் பெரும்பாலான கேபிள் ஆபரேட்டர்கள் எங்கள் பக்கமே இருந்தார்கள். தொழில் நுட்ப ரீதியாக நாங்கள் உயர்ந்த சேவையை அளிக்கிறோம். மக்களும் விரும்பி பார்க்கிறார்கள். எங்களை வீழ்த்த இதுவரை நடந்த 3 முயற்சிகளிலுமே சிறு சேதாரம் கூட ஏற்படாமல் இயங்கி கொண்டிருக்கிறோம். ஆரோக்கியமான போட்டி என்றால் வரவேற்கலாம். திட்டமிட்டு குழப்பம் ஏற்படுத்த நினைக்கும் சிலரின் முயற்சி இது. ஆனாலும் எங்களுக்கு இதனால் கவலை இல்லை''’என அழுத்தமாக சொல்கிறார்கள்.

No comments:

Post a Comment