shockan.blogspot.com
வடிவேலு-சிங்கமுத்து நிலப்பிரச்சினை புகைச்சலை ‘"நக்கீரன்' வெளியே கொண்டு வந்த பிறகு நாடே அறிந்தது அவர்களின் சண்டையை.
போன மாசம்தான வடிவேலுவுக்கும், சிங்கமுத்து வுக்கும் சண்டை வந்திச்சு?
"அது போன மாசம்! இது இந்த மாசம்..' புதுச் சண்டை.
"இவர்களின் சின்னப்புள்ளத்தனமான வெளையாட் டால்... காவல்துறைக்கு கண்ணக்கட்டுது' என காவல்துறையினரே சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். பொது மக்களும் லைவ் காமெடியை பராக்கு பார்த்த மாதிரி பார்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
லேட்டஸ்ட் சண்டையின் சங்கதிகளை இரு தரப்பிடமும் கேட்டோம்.
காமெடி நடிகர் ‘குண்டு கல்யாணம் இயக்கிவரும் படம் "நாங்க புதுசா'. இந்தப்படத்தின் தயாரிப்பாளர் கண்ணனின் அலுவலகம் வடிவேலுவின் அலுவலகத்திற்கு எதிரே உள்ளது.
இந்த இடத்திலிருந்து நடந்தது என்ன? என்பதை கண்ணன் சொல்கிறார்.
""கடந்த 7-ந் தேதி சாயங் காலம் என்னோட மகளுக்கு பிறந்த நாள் விழா நடத்தி னேன். விழாவுக்கு என் பட யூனிட் ஆட்கள் பலரும் வந் தாங்க. என் படத்திற்கு காமெடி டிராக் எழுதி நடிக்கிறார் சிங்க முத்து. இதனால்... அவரையும் அழைத்திருந்தேன். ஆனந்தராஜ், சிங்கமுத்து உள்ளிட்ட நடிகர்கள் வந்தபோது... பட்டாசு கொளுத்தி வரவேற்றோம். இது வடிவேலு தரப்பிற்கு ‘ஏதோ... நான் சிங்கமுத்தை வடிவேலுக்கு எதிராக வாழ்த்தி வரவேற்பதாக ஃபீலிங் வந்திருக்கும் போல. உடனே விருகம் பாக்கம் போலீஸிற்கு போன் செய்து ‘"வடி வேலுவை தாக்குவதற்காக கூட்டமாக சிங்க முத்து ஆட்கள் வந்திருக்காங்க' என புகார் சொல்ல... போலீஸார் வந்து என்னை விசாரித் தார்கள். என் மகளின் பிறந்த நாள் விழா நடப் பதை புரிந்து கொண்ட போலீஸார்... போய் விட்டனர். ஆனாலும் வடிவேலு ஆட்கள் கேட் டுக் கொண்டதால் வடிவேலு அலுவலகத் திற்கு போலீஸார் பாதுகாப்பாக நின்றனர்.
9-ந் தேதி... இரவு வடிவேலு ஆபீஸிலிருந்து ரித்தீஷ் எம்.பி. வீட்டுக்கு போன் செய்திருக்கிறார்கள். இதையடுத்து ஆறு பேர் உருட்டு கட் டைகளுடன் என் அலுவலகத்திற்கு வந்தனர். அப்போது நான் இல்லை. என் மனைவி போன் செய்து ‘"வீட் டுக்குள்ள புகுந்து எங்க அப்பாவ அடிக்கிறாங்க' என கதறவும் வீட்டுக்கு ஓடினேன். வடிவேலு ஆபீஸில் பாதுகாப் பிற்கு இருந்த போலீஸாரை பார்த்து "எங்களை.. வீடு புகுந்து அடிக்கிறாங்க. வேடிக்கை பாக்குறீங் களே'னு அலறின பிறகு... போலீஸ் வந்தது. அதற்குள் அவர்கள் ஓடிவிட... ரித்தீஷிடம் வேலை பார்க்கும் ஒரு ஆளை மட்டும் போலீஸ் பிடித்தது. நான் ஒரு தயாரிப்பாளரா என் படத்தில் சிங்கமுத்துவை நடிக்க வச் சேன். மத்தபடி வடிவேலுவுக்கும், சிங்க முத்துவுக்கும் இருக்க... சொந்த சண்டையில் என் தலையை உருட்றாங்க!'' என்றார் கண்ணன்.
சம்பவம் நடந்தபோது வடிவேலு இல்லை. அப்போது அலுவலகத்தில் இருந்த வடிவேலு வின் துனை மேனேஜர் சங்கரிடம் பேசினோம்.
""அவங்க வீட்ல ஃபங்ஷன் நடக்குது. சிங்க முத்து வந்தா அவங்க வீட்டு வாசல்ல வச்சு வெடி போடலாம். அதவிட்டுட்டு எங்க ஆபீஸ் வாசல்வரைக்கும் 10000 வாலா பட்டாச கொளுத்தினதோட... "அண்ணன் சிங்கமுத்து வாழ்க'னு கோஷம் போட்டதோட... வடிவேலு அண்ணனையும் தப்பா பேசினாங்க. ஆட்கள் வேற நிறைய்யா இருந்தாங்க. இதனாலதான் போலீஸுக்கு தகவல் சொன்னோம்.
ஆனா கண்ணனும், சிங்கமுத்துவும் உசுப்பேத்திவிட்டு அவங்க ஆளுக... எங்களை மிரட்டினாங்க! எங்க அலுவலகத்தில் புகுந்து என்னை சூழ்ந்துகிட்டு தாக்க ஆரம்பிச்ச தோட... கொலை மிரட்டலும் விட்டாங்க. இத னால் நான் விருகம்பாக்கம் ஸ்டேஷன்ல கம்ப்ளைண்ட் குடுத்தேன்'' என்றார்.
நான்-பெயிலபிள் செக்ஷனில் சிங்க முத்து, கண்ணன் உட்பட பத்துப் பேர்கள் மீது... போலீஸார் வழக்குப்பதிவு செய்தாலும் கூட... கைது முயற்சிகளில் ஈடுபடவில்லை.
காரணம்... இது தி.மு.க. மற்றும் அ.தி. மு.க. பிரச்சினையாகுமோ... என்பதால்தான்.
இதென்ன புது பாலிடிக்ஸ்?
கண்ணன் அலுவலக பகுதிகளில் விசாரித்தோம்.
""கண்ணன் இந்த ஏரியாவுக்குள்ள வந்ததில் இருந்தே பிரச்சினைதான். குடியிருப்புக்கு மத்தியில் சினிமா தயாரிப்பு ஆபீஸ் வச்சிக்கிட்டு... நடிகைகள் என்கிற பேர்ல... பகல்-இரவுனு பாக்காம பலான பெண்களை வரவழைக்கிறார். கேட்டா... ஆர்டிஸ்ட் செலக் ஷன்னு சொல்றார். அசிங்கமா இருக்கு. இதுபத்தி அவர்கிட்ட கேட்கவும் ஏரியாவாசி களுக்கு பயம். ஏன்னா... அவரு முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தோட சொந்தக் காரர்னு சொல்லியே பந்தா காட்டுறார்'' என்று பயத்துடன் சொன்னார்கள்.
தேனி பகுதியைச் சேர்ந்த திரை யுலகினர் சிலரிடம் நாம் விசாரித்த போது... ""கண்ணன் தேனிப் பகுதிக்காரர்தான். ஆனா... அவர் மேல நிறைய்ய பண மோசடி, லோன் வாங்கிட்டு கட்டாததுனு ஏகப்பட்ட அலிகேஷன். ஓ.பன்னீர்செல்வத்தோட தம்பி ராஜாகிட்ட கூட... பணம் பெரிய அளவில் வாங்கிட்டு ஏமாத்தினார் கண்ணன். அப்புறம் பஞ்சாயத்து மூலமாத்தான் பணத்தை ரெகவரி பண்ணாங்க. ஏற்கனவே கல்யாணமானவர்... இப்போ இன்னொருத்தர் பொண்டாட்டிய இழுத்திட்டு ஓடி வந்திட்டாரு. இது போல கார் ஒன்றை ஒரு வருஷமா நம்பர் பிளேட் இல்லாம யூஸ் பண்ணிக்கிட்டிருக்கார். ஓ.பன்னீர்செல்வத்தோட ரிலேஷன்னு அடிக்கடி சொல்லிக்குவார்'' என கண்ணன் மீது கம்ப்ளைண்ட்டுகளை அடுக்கினார்கள்.
வடிவேலு மீது கோபத்தில் இருக்கும் சிங்கமுத்துவும் கண்ணன் ஓ.பன்னீர்செல்வத்தோட ரிலேஷன் என்பதை நம்பி வடிவேலுவுக்கு எதிரா கொம்பு சீவி விட்டிருக்கார்.
இன்னொரு புறம் ஜாதிரீதியாகவும் வடிவேலுவுக்கு எதிராக பிரச்சினையை திசை திருப்ப முயன்ற சிங்கமுத்து... தேவர் அமைப்பில் போய் முறையிட்டிருக்கிறார். ""கண்ணனும் நம்ம ஜாதி. அவரையும் வடிவேலு ஒழிக்கப்பார்க்கிறார்'' எனச் சொல்ல... தேவர் அமைப்பினர் அதுகுறித்து விசாரித்தனர். ஏற்கனவே சிங்கமுத்து தன் ஜாதிக்காரராக இருந்தும் கூட வடிவேலு பக்கம் நியாயம் இருப்பதை கே.கே.நகர் தி.மு.க. பிரமுகர் தனசேகரன் உணர்ந்து சிங்கமுத்துவை கண்டித்ததை ‘"நக்கீரனி'ல் சொல்லியிருந்தோம். நடிகர் கருணாசுக்கும் தேவர் அமைப்பில் நல்ல செல்வாக்கு உண்டு. அவரும் கூட.... ‘"வடிவேலு ஜாதி துவேஷம் உடையவரல்ல' என உண்மையை எடுத்துச் சொன்னாராம். 12-ந் தேதி கூட கருணாஸ் ஹீரோவாக நடித்துவரும் "அம்பாசமுத்திரம் அம்பானி' படத்தின் இசை வெளியீட்டு விழாவில் வடிவேலுவும், விவேக்கும் கலந்து கொண்டு கருணாஸை வாழ்த்தியது குறிப்பிடத்தக்கது. இதனால் கண்ணனையும், சிங்கமுத்துவையும் ஆதரிக்க மறுத்துவிட்டது தேவர் அமைப்பு.
"‘ஓ.பி.யோட ரிலேஷன், சசிகலா அம்மா எனக்கு தூரத்துச் சொந்தம்' என கண்ணன் விட்ட உதாரில்.... காக்கிகளும் சைலண்ட்டாகத்தான் இருந்தனர்.
ஆனால் இந்த விஷயம் ஓ.பி. தம்பி ராஜாவின் காதுக்கு எட்டியது. உடனே ராஜா.. முக்கிய காவல்துறை அதிகாரி ஒருவரை தொடர்பு கொண்டு... "கண்ணன் மோசடிப் பேர்வழி. அவர் எங்களுக்கு சொந்தக்காரர் கிடையாது' எனச் சொல்லிவிட... அதற்குப்பின் சுதாரித்த போலீஸார்... சிங்கமுத்துவையும், கண்ண னையும் வலைவீச... அதற்குள் இருவரும் தலைமறைவாகி தேனியை அடுத்த வீரபாண்டி பகுதியில் ஒரு பண்ணை வீட்டில் பதுங்கி யிருப்பதாகச் சொல்கிறார்கள்.
கண்ணன் மீதான குற்றச்சாட்டு குறித்து விசாரிக்க... அவரை தொடர்பு கொண்டபோது நாட்-ரீச்சபிள்.
நடிகரும், தி.மு.க. எம்.பி.யுமான ஜே.கே.ரித்தீஷ் ஆட்கள் கண்ணனின் அலுவலகம் புகுந்து தாக்கினார்கள் என கண்ணன் சொன்னதன் பின்னணியை விசாரித்தோம்.
தி.மு.க. பிரமுகர் தனசேகரன் பஞ்சாயத்துப் பண்ணியபோது ‘"வடிவேலுவிடம் மோசடி பண்ணிய பணத்தை திருப்பித் தந்துவிடுகிறேன்' என ஒப்புக்கொண்ட சிங்கமுத்து டிமிக்கி கொடுக்க... அதன்பின் இந்த விஷயத்தை கைவிட்டுவிட்டார் தனசேகரன். அதன் பிறகுதான் ரித்தீஷிடம் விஷயம் போனது. அவரும் தன்னை வைத்து படம் இயக்கவிருக்கும் பாவாவிடம் இது பற்றி பேசித் தீர்க்கச்சொன்னார். பாவாவும் பஞ்சாயத்து பண்ணியும் சிங்கமுத்து சரி வராததால்தான் வடிவேலு போலீஸ், கோர்ட் என போனார். இது குறித்தும் நாம் ஏற் கனவே எழுதியிருக் கிறோம். இந்த கடுப்பில் தான் சிங்கமுத்து தூண்டுதலின் பேரில் ரித்தீஷ் ஆட்கள் அடித்ததாக சொல்லியிருக்கிறார் கண்ணன்.
தி.மு.க. எம்.பி.யின் மீதே இப்படி ஒரு குற்றச்சாட்டு சொன்னதால் ரித்தீஷிடம் பேசினோம்.
""இயல்பிலேயே கஷ்டப்படும் சினிமா தொழிலாளர்களுக்கு என்னால் முடிந்த உதவிகளைச் செய்துவருகிறேன். எல்லோருடனும் எளிமையாக பழகுகிறேன். அவர்களுக்கு ஏதாவது பிரச்சினை என்றால் சுமுகமாக பேசித்தீர்க்க உதவுவேன். வடி வேலு விஷயத்திலும் அப்படித்தான் உதவி செய்தேன். ஆனால்... பேச்சுவார்த்தை சரியாக வராததால் சட்ட ரீதியாக பார்த்துக் கொள்ளச் சொல்லிவிட்டேன். எல்லோரிடமும் நான் சகஜமாக பழகுவதால்... ஏதாவது பிரச்சினை என்றால்... "நான் ரித்தீஷோட ஆளு' என யாராவது சொல்லிவிட்டுப் போனால் அதற்கு நான் எப்படி பொறுப்பாக முடியும். நான் யாரையும் உதைக்க அனுப்பவில்லை'' என்கிறார் எம்.பி.
இப்படி... சிங்கமுத்துவின் பின்னணியில் வடிவேலு வுடன் கண்ணனை மோத விட்டிருக்கிறார்கள்.
கண்ணன் தயாரிக்கும் படத்தின் பெயர் ‘"நாங்க புதுசா'.’’
"நாங்க புதுசா முட்டிக் கிட்ட ஜோடிதானுங்கோ...' என வடிவேலுவோடு மோதி புகழ் அடைந்துவிட்டதாக புல்லரிக்கிற தாம் கண்ணன் தரப்பு.
இந்த கும்மு... கும்முனா!
கண்ணன் கலாட்டாவில் வடிவேலு சம்பவ இடத்தில் இல்லை என்றாலும் மையப்புள்ளி வடிவேலுதானே.
அவரிடம் கேட்டோம்...
""சண்டாளப்பாவிக சாகடிக்கிறாய்ங்களே... நான் பாட்டுக்கு செவனேனு போய்க்கிட்டிருக்கேன். சம்பந்தமே இல்லாத விஷயத்திலயும் என்னய இழுத்துப் போட்டு இந்த கும்மு... கும்முனா எப்புடி சாமி? காமெடி காட்சிய திங்க் பண்ணி நடிக்கிறவன் ஓரளவுக்கு மன நிம்மதியா இருந்தாத்தான் மக்கள் சிரிக்கிற மாதிரி சிந்திக்க முடியும். இம்புட்டு டார்ச்சர் குடுத்தும் தொழில்ல ரொம்ப கவனமா இருக்கேன். எப்புடியாவது எனக்கு மன ஔச்சல குடுத்து என்னோட தெறமைய சாகடிக்கப் பாக்குறாய்ங்க''’என வெசனப்பட்டார் வடிவேலு. அவரின் மூடை மாற்றும் விதமாக அவரின் டயலாக்கையே அவரிடம் சொன்னோம். சோகத்தை மறந்து சிரித்துவிட்டார் வடிவேலு.
என்ன டயலாக்?
"நீங்களும் எம்புட்டு தடவதான் வலிக்காதது மாதிரியே நடிக்கிறது?'
this is very very bad....no one has the pahutharivu , no decency, cinemavila act pannara maadiri nija vaazhkaileum pannaranga...
ReplyDeleteKadavul kodutha ariva use pannunga.. vaazhapovadhu oru thadavai thaan idila sandaum sacharavum etharku...sothum panamum kooda varadhu..anbudan vaazhungal..makkal manadhil idam kollungal..be happy and cheerful..