Sunday, April 11, 2010

அழகைக் காட்டுவதில் என்ன தப்பு? அடம்பிடிக்கும் மல்லிகா!



shockan

கள்ளச்சாராயம் காய்ச்சாதேன்னா... அதை விட்டுட்டு கள்ளபிராந்தி தயார் செய்வது மாதிரித்தான் இருக்கு.... குத்தாட்ட சமாச்சாரங்கள். மும்பை பார்களில் பெண்கள் அரைகுறை ஆடையோடு குத்தாட்டம் போட தடை விதித்தது மஹா ராஷ்டிரா அரசு. வேறு காரணமா கண்டுபிடிக்கத் தெரியாது. விழாக்களை சாக்காக வைத்து விசேஷ விருந்து நட னங்களுக்கு ஏற்பாடு செய்து வருகிறது மும்பை நட்சத்திர ஹோட் டல்கள். இந்த விருந் தில் பங்கேற்க பத்தா யிரம் ரூபாய் வரை கட்ட ணம். பாலிவுட்டின் கவர்ச்சி நடிகைகளை அள்ளி வந்து ஆடவிட்டு துட்டு பார்க்கிற வேலைகளில் இறங்கியிருக் கிறார்கள் மும்பை ஆட்கள்.

போன வருஷ புத்தாண்டுக்கு ரெண்டு கோடி ரூபாய் வாங்கிக் கொண்டு குத்தாட்டம் போட்டார் "சச்சின்' படத்தில் விஜய்யுடன் நடித்த பிபாஷா பாசு. அதே போல சுயம்வர புகழ் ராக்கி சாவந்த்தை கூட்டி வந்து இன்னொரு ஹோட்டல் கெட்ட ஆட்டம் நடத் தியது. விழாவுக்கு குடும் பத்தோடு போன ஒருவர் ‘"ஆட்டம் ரொம்ப ஆபாசமா இருந்திச்சு' என போலீஸில் புகார் தந்தார்.

நடிகர் ஹிருத்திக் ரோஷன் தன் வீட்டில் சக நடிகைகளையெல்லாம் கூப்பிட்டு குத்தாட்டமும், குடியும் போட... குடியிருப்பு வாசிகள் கண்ட்ரோல் ரூமிற்கு புகார் செய்யவும்... போலீஸ் படை வந்து ஹிருத் திக்கை எச்சரித்துவிட்டுப் போனது. விஜய்யுடன் "தமிழன்' படத்தில் நடித்த ப்ரியங்கா சோப்ராவும் இதே போல தன் ஆண்-பெண் நண்பர்களை கூட்டி வந்து தன் வீட்டில் ஆல்ஹகால் ஆட்டம் போட்டார். அந்த குடி யிருப்பில் இருந்த நோய்வாய்ப் பட்ட பெருசு கள் "விடிய விடிய தூங்க முடிய வில்லை. சவுண் டை குறைச்சு என்னமோ பண்ணித் தொலைங்க...' என கெஞ்சியும் பிரியங்கா கோஷ்டி கேட்காத தால் பாந்த்ரா காவல் நிலையத்தில் புகார் செய்ய... போலீஸ் வந்து ரவுண்ட் கட்டியது.

"பார்ட்டியை அரேஞ்ஜ் பண்ணியது என் மேனேஜர் தான்' என பிரியங்கா கையைக் காட்டிவிட... முப்பதாயிரம் ரூபாய் அபராதம் வசூலித்த போலீஸார்... "இன்னொரு முறை புகார் வந்தால் அரெஸ்ட் செய்வோம்' என எச்சரித்தது.

இன்னொரு நிகழ்ச்சியில் ஃபேஷன் ஷோவும் நடத்தினார்கள். அதில் ஹீரோ அக்ஷய்குமார் புதுவகை ஜீன்ஸை மாட்டிக் கொண்டு வந்து பார்வையாளர் வரிசையில் உட்கார்ந்திருந்த நடிகையும், தனது மனைவியுமான ட்விங்கிள் கண்ணாவிடம் வந்து "ஜீன்ஸ் ஜிப்பை போட்டு விடு' எனச் சொல்ல... ட்விங்கிளும் வெட்கம் கலந்த சிரிப்போடு ஜிப்பை போட்டுவிட்டார். விழா அரங்கில் செம பரபரப்பு. இதுவும் போலீஸில் புகார் ஆனது. சிவசேனாவும் கடும் எதிர்ப்பை கிளப்ப.... பகிரங்க மன்னிப்பு கேட்டுக் கொண்டார் அக்ஷய்.

கடந்த ஆண்டு இதேபோல் ரெண்டு கோடி ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டு மத்திய பிரதேச மாநிலத்தில் ஒரு புத்தாண்டு நிகழ்ச்சியில் குத்தாட்டம் போட்டார் "தசாவதாரம்' புகழ் மல்லிகா ஷெராவத். இந்த ஆபாச கூத்தை பார்க்கச் சகிக்காதவர்கள் போலீஸுக்கு போனால் வேலைக்காகாது என்று கோர்ட்டுக்குப் போய்விட்டார்கள். யவத்மால் மாவட்டம் பந்தர்கவ்டா மாஜிஸ்ட்ரேட் கோர்ட்டில் ரஜினிகாந்த் என்பவர் மல்லிகாவின் ஆபாச ஆட்டம் அடங்கிய சி.டி.யோடு வழக்கை தாக்கல் செய்ய... மல்லிகாவை ஆஜராகும்படி மூணுமுறை சம்மன் அனுப்பியும்.... மல்லிகா டேக்கா கொடுக்க... மல்லிகாவுக்கு பிடிவாரண்ட் போடப்பட்டிருக்கிறது.

""பாலிவுட் நடிகைகளின் ஆட்டம் இருக்கட்டும். நம்மூர் நட்சத்திரங்களின் பார்ட்டியும்- ஆட்டமும் அதைவிட மோசமாகத் தான் இருக்கிறது....'' என நம்மிடம் புலம்பித் தள்ளினார் கோலிவுட் புள்ளி.

""ஒரு பார்ட்டியில் யாரோ ஒரு ஆம்பிளையை ஸ்ரேயா, ரீமாசென் மற்றும் அவரது தோழிகள் சேர்ந்து போதையில் கட்டிப்பிடிப்பது, த்ரிஷாவும், இன்னும் இரு பெண்களும் மிக ஆபாசமாக கட்டியணைப்பது, த்ரிஷாவும் அவரின் பாய் ஃபிரண்ட்டும் மூச்சுமுட்ட நெருக்கியடிப்பது... இப்படி பார்க்கச் சகிக்காதபடி இவர்களும் சரக்கு பார்ட்டியும், சரச ஆட்டமும் போட்டபடிதான் இருக்கிறார்கள். இவர்களை யார் தட்டிக் கேட்பது?...'' என விசனப்பட்டார் அவர்.

இவர்கள் தங்கள் நண்பர்களுக்குள் நடத்திக் கொள்ளும் பார்ட்டி எப்படி பொது மக்களை பாதிக்கும்? என நாம் அவரிடம் கேட்க...

""பத்துபேருக்கு மேல் கூடிட்டாலே அதுவும் ஒரு பொது நிகழ்வுதான். தனிப்பட்ட ரெண்டு பேரோட இருப்பதுதான் அந்தரங்கம். மத்ததெல்லாம் பொது அரங்கம்தான். அப்படியே இவர்கள் தனிப்பட்ட பார்ட்டி நடத்தினாலும் அதை தங்களின் ஃபேஸ்புக்கில் வெளியிடுகிறார்கள். பிரபலமானவர்களே இப்படி இருக்கும் போது நாம இப்படி இருந்தா என்ன... என இளசுகளின் மனசை கெடுப்பது போலத்தான் இருக்கிறது கோலிவுட் நடிகைகளின் பார்ட்டி. இந்த படங்களை வெளியிடு வதற்காகவே... சைபர் க்ரைம் பிராஞ்ச் போலீஸார் இந்த நடிகைகள் மீது நடவடிக்கை எடுக்க லாமே?'' என ஆத்திரப்பட்டார்.

இந்நிலையில் ஆபாசமா ஆடுவது, திரைப்படங்களில் நடிப் பது குறித்து சமீபத்தில் அதிரடி ஸ்டேட்மென்ட் விட்டிருக்கிறார் ‘"தசாவதாரம்' மல்லிகா ஷெராவத். "ஆரம்பத்தில் எனக்கு இந்தி சினிமா வாய்ப்பு கிடைக்கவில்லை. அவமானமே மிஞ்சியது. அப்போது எனது உடல் அழகை வைத்துத் தான் முதல் வாய்ப்பை பெற்றேன். எனக்கு லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றுத்தந்த ‘"மர்டர்' படத்தின் வெற்றிக்கும் எனது உடல் அழகே காரணம். ரசிகர்கள் முக அழகைவிட உடல் அழகுக்குத்தான் முக் கியத்துவம் தருகிறார்கள். இருக்கிற அழகை காட்டு வதில் என்ன தப்பு?'

-இப்படிச் சொல்கிற மல்லிகாவா சட்டங்களுக்கு பயப்படப்போகிறார்?

No comments:

Post a Comment