Thursday, April 15, 2010
ஒன்றேகால் கோடி ரூபாய் கார் பரிசு!
shockan.blogspot.com
இந்தியச் சினிமாவின் சாபக்கேடு- நாயகனுக்கு 60 வயது ஆனாலும் 20 வயது நாயகியோடு ஆடிப் பாடி கட்டி உருள முடியும்; ஆனால் கதாநாயகிகள் இழந்த மார்க்கெட்டை மீண்டும் பிடிக்க முடியாது. சிலர் நாயகனுக்கு அம்மா வாகவோ அண்ணி யாகவோதான் நடிக்க முடியும். பலருக்கு அந்த வாய்ப்பும் அமையாது. உடனே கல்யாண வாழ்க்கை யில் அடியெடுத்து வைத்து விடுவார்கள்.
"உள்ளத்தை அள்ளித்தா' படம் மூலம் கோலிவுட்டில் அடியெடுத்து வைத்தார் ரம்பா. தனது கவர்ச்சி சூறாவளியால் தமிழ் ரசிகர்களைக் கட்டிப் போட்டார். புது வரவுகளால் மார்க்கெட் சரிய, இப்போது திருமணம் செய்து கொண்டிருக்கிறார்.
கனடாவில் தொழில் செய்து கொண்டிருக்கும் இந்திரகுமார் என்கிற பத்பநாபனின் துணைவியாகி விட்டார். திருப்பதியில் திருமணம் நடந்தேறியது.
சென்னை, ஹைதராபாத்தை யெல்லாம் விட்டுவிட்டு, திருப்பதியில் திருமணம் செய்து கொண்டதற்குக் காரணம்?
""அம்மாவின் வேண்டுதல்தான் காரணம்'' என்றார் ரம்பா! தமிழ், தெலுங்கு பட உலகப் பிரபலங் களான ரோஜா, டான்ஸ் மாஸ்டர் கலா மற்றும் தெலுங்குப் பட உலக முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டு வாழ்த்தினர். திருமணம் விஜயவாடா சம்பிரதாயப்படி நடைபெற்றது. திருமணப் பரிசாக ஒன்றேகால் கோடி மதிப்புள்ள காரை ரம்பா வுக்கு வழங்கினார்- மணமகன் இந்திரகுமார்.
திருமணத்தில் கலந்து கொண்ட வர்களுக்கு 50 வகையான சிற்றுண்டி வழங்கினர்.
சென்னையில் நடந்த வரவேற்பு நிகழ்ச்சியில் நட்சத்திரப் பட்டா ளமே கலந்து கொண்டு, புது
மணத் தம்பதியரை வாழ்த்தியது.
ஏழுமலையான் அருளால் நீண்ட மண வாழ்க்கை அமைய வாழ்த்துவோம்!
Subscribe to:
Post Comments (Atom)
hmm..panam paduthum paadu.. ethanai kodi roova caarana enna...moonu chakkara auto pinnala thaane poi aaganum ...hahhhaha
ReplyDelete