நிலப் பிரச்சினையில் சந்தானம்!
நிலம் வாங்குவதில் ஏமாந்து ஏகப்பட்ட பணத்தை இழந்தார் வடிவேலு. அது இன்னமும் பைச லாகாத நிலையில்... இன்னொரு காமெடி நடிகரும் நிலப் பிரச்சினையில் சிக்கியிருக்கிறார்.
நடிகர் சந்தானம் சென்னை விருகம் பாக்கம் பகுதியில் ஒரு இடம் பேசினார். ஒரு கோடியே 90 லகரத்துக்கு பேசி முடித்து 90 லகரம் அட்வான்ஸும் கொடுத் தாராம். பாக்கியை செட்டில் பண்ணி பத்திரம் பதிவு செய்யப் போனவருக்கு அதிர்ச்சி. இடத் தின் உரிமையாளரான ஆந்திரா பார்ட்டி ஒருவர்.... ‘"இப்போ இந்த இடம் 3 கோடி மதிப்பு' எனச் சொல்லி தகராறில் இறங்க.... ஆஃப் த ரெக்கார்டாக காவல்துறை அதிகாரி ஒருவரின் உதவியை நாடியிருக்கிறாராம் சந்தானம்.
நழுவிய விஜய்!
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு தேவையா? எனக்கேட்டு மாணவர்கள் வயிற்றில் சந்தோஷத்தையும், பெற்றவர்கள் வயிற்றில் எரிச்சலையும் உண் டாக்கினார் மத்திய அமைச்சர் கபில்சிபில். அது கிடக்கட்டும்... இந்திய கல்வி முறையை கேலி செய்த "த்ரீ இடியட்ஸ்' படம் பாலிவுட்டில் ஹிட். இதை தமிழில் விஜய், உதயநிதி ஆகியோரை வைத்து எடுக்க திட்டமிடப்படுவதை ஏற்கனவே கூவியிருந்தேன். ஆனால்... "மலையாள ‘"பாடிகாட்' படத்தின் தமிழ் ரீ-மேக்கில் நடித்த பிறகு இந்தப் படம் பற்றி யோசிக்கலாம்' என விஜய் நழுவ... டைரக்டர் தரணி தெலுங்கிற்கு போய்விட்டார். சிரஞ்சீவி மகன் ராம் சரண் தேஜாவை வைத்து தெலுங்குப் படம் இயக்க கில்லியாக கிளம்பிவிட்டார் தரணி.
நடிகைக்கு தடை!

"குரு-சிஷ்யன்' படத்தில் கண்டபடி கவர்ச்சியை பிழிந்திருக்கும் சுருதியைத் தேடி ஏகப்பட்ட வாய்ப்புகள். ஆனால் "உன்னை அடுத்த நமீதாவா ஆக்கிக்காட்டுறேன்' என அம்மணியை முழுசாக எக்ஸ்போஸ் செய்திருக்கும் டைரக்டர் ஷக்தி சிதம்பரம், "குரு-சிஷ்யன் வரவரைக்கும் அடுத்த படம் ஒப்புக்காதே. அப்பத்தான் அதிக சம்பளம் கிடைக்கும்' என தடை போட்டு வருகிறாராம்.
அந்தக்கால மதராஸ்!
கல்பாத்தி அகோரம் தயாரிப்பில் ஆர்யா நடித்து வரும் படம் ‘"மதராஸபட்டணம்'. இந்தப் படத்துக்காக அந்தக்கால சென்னையை தத்ரூபமாக திரையில் கொண்டுவர பெரு முயற்சி எடுத்து வருகிறாராம் டைரக்டர் விஜய். சமீபத்தில் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவிற்கு விஜய் தயார் செய்திருந்த அழைப்பிதழ் இண்டஸ்ட்ரியையே மிரள வைத்து விட்டது. அந்தக்கால சென்ட்ரல் ரயில் நிலையம், அண்ணா சாலை, மைலாப்பூர், மெரினா பீச், அந்தக்கால மூணு அணா போஸ்ட் கார்டு, அந்தக்கால செப்புக்காசு... என ஒவ்வொன்றின் மாதிரியையும் ஒவ்வொரு அழைப்பிதழிலும் வைத்து அசரடித்துவிட்டார்கள்!
அப்படியா?
பெரிய அரசு, வெப் பன்ஸ் செய் வோம் போன்ற படங்களை இயக்கிய டைரக்டர் உதய மானவர் பார்ப்பதற்கு அப்பாவி போல இருப்பார். சமீபத்தில் பருத்தி வீரனுக்காக ஒரு ஆக்ஷன் கதையை ரெடி செய்து கொண்டு போனார். தங்க மான மேனேஜரிடம் கதை சொல்ல விரும்பியபோது.... "உங்களை பார்த்தாலே ஒரு கெட்-அப்பா இல்ல. அதனால் உங்க கிட்டயெல்லாம் கதை கேட்க முடியாது' என திருப்பி யனுப்பிவிட்டாராம் மேனேஜர். உருவத்தை பாக்காதீங்கய்யா... திறமையை பாருங்க!

No comments:
Post a Comment