Thursday, April 15, 2010
அரசியல் தாதாவின் தொடரும் வெறியாட்டம்!
shockan.blogspot.com
கடந்த 9-ம் தேதி காலை காஞ்சிபுரம் திருவண்ணாமலை மாவட்டத்தின் எல்லைப் பகுதியான புஞ்சை அரசன்தாங்கல் கிராமத்தில் கிருஷ்ணன் என்பவர் வந்தவாசி சாலையின் ஓரத்தில் படுகொலை செய்யப்பட்டார்.
இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளி யான நக்கீரன் இதழில் "காஞ்சியை மிரட்டும் அரசியல் தாதா' என்கிற தலைப்பில் வெளியான கட்டுரையில் ஸ்ரீதர் என்கிற ரவுடி செய்யும் அட்டூழியங்களைப் பற்றி பேட்டி கொடுத்தவர்களில் ஒருவர் தான் இந்த கிருஷ்ணன்.
கிருஷ்ணனுக்கும் ஸ்ரீதருக் கும் இருந்த மோட்டிவ் பற்றி நம்மிடம் பேசிய காஞ்சிபுரம் காவல்துறை கண்காணிப் பாளர் பிரேம் ஆனந்த் சின்ஹா, ஸ்ரீதர் ஒருவித மான சைக்கோ போன்ற ரவுடி. மார்க்கெட் சீனி வாசன் என்பவனை ஸ்ரீதர் கொலை செய்தான். அந்த ரகசியமான கொலை விவ காரம் கிருஷ்ணனுக்கு தெரியவந்தது. அன்று முதல் கிருஷ்ணனை கொலை செய்ய தொடர்ந்து முயற்சி செய்து வந்தான். நில மோசடி, ஆள் கடத்தல், கொலை என மொத்தம் 57 வழக்குகள் ஸ்ரீதர் மீது இருக்கிறது. சமீபத்தில் அவனையும் அவனது கூட்டாளிகளையும் வெடிகுண்டுகளோடு கைது செய்து குண்டர் சட்டத்தில் சிறையிலடைத்தோம். சிறையிலிருந்தபடியே கிருஷ்ணனை கொலை செய்ய முயல்கிறான் ஸ்ரீதர் என எனக்கு தகவல் கிடைத்தது. உடனே கிருஷ்ணனை எச்சரிக்கையாக இருக்கும்படி சொன்னேன். வெளியூருக்கு சென்று தங்குவதாக எங்களிடம் சொன்ன கிருஷ்ணன், ஊருக்குள் வந்து சுதந்திரமாக சுற்றித் திரிவதை அறிந்த ஸ்ரீதர்தான் இந்தக் கொலையை செய் திருப்பான் என சந்தே கிக்கிறோம்'' என்றார்.
கிருஷ்ணனின் தம்பி ராஜேந்திரனோ... ""காஞ்சிபுரத்தில் யாரும் ஸ்ரீதருக்கு எதிராக பேசக்கூடாது. பேசினால் அவர்களை கொன்றுவிடுவான். அவனுக்கு ஆதரவாக காஞ்சிபுரத்தில் உள்ள சில முக்கிய பிரமுகர்கள், காவல்துறையின் டி.ஐ.ஜி. போன்றவர்களே செயல்படுகிறார்கள். இந்த செல்வாக்கால் காஞ்சிபுரத்தில் உள்ள செல்வந்தர்களை மிரட்டி அவர்களது சொத்துக்களை சூறை யாடி சொந்த மாக்கினான்.
அதை நக்கீரன் ஆதாரங்களுடன் "காஞ்சியை மிரட்டும் அரசியல் தாதா' என செய்தி வெளியிட் டது. அதன் எதி ரொலியாக ஸ்ரீதர் கைது செய்யப் பட்டு சிறையில் அடைக்கப்பட்டான். அதைத் தொடர்ந்து அவன் மீதிருந்த பயம் விலகியது. புகார்கள் குவியத் தொடங் கின. மீண்டும் ஒரு டெர்ரர் இமேஜை உருவாக்க 11-வது முறையாக முயன்று கிருஷ் ணனை கொன்றுவிட்டான்'' என்றார் வருத்தத்துடன்.
அரசியல்+போலீஸ் அதிகாரிகளின் ஆதரவில் இன்னும் எத்தனை பேரை கொல்லப்போகிறானோ இந்த கொடூரன் ஸ்ரீதர்.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment