Thursday, April 15, 2010

ஒபாமா என் நண்பர்!

shockan.blogspot.com
வெளிநாட்டுல வேலை வாங்கித் தர்றேன்னு பணத்தை வாங்கிட்டு டிமிக்கி கொடுக்குற நம்ம ஊர் ஆசாமி களைத்தான் பார்த்திருக்கோம். ஆனா அமெரிக்க அதிபர் ஒபாமா எனக்கு நெருங்கிய நண்பர். அவர்கிட்ட சொல்லி வேலை வாங்கித் தர்றேன்னு பல லட்சங்களை வாங்கிய வெளிநாட்டு ஆசாமி யை மடக்கிப் பிடித்திருக்கிறார்கள் திருச்சி மாவட்ட காக்கிகள்.

எவ்வளவுதான் சொன்னாலும் ஏமாந்தே தீருவோம்னு தீர்மானமாக இருப்பவர்களில் ஒருவரான... பணத்தை பறிகொடுத்த ஜீயர்புரம் அருகிலுள்ள அல்லூர் ஆறுமுகம் நம்மிடம்... "" என் பையன் பிரகாஷ் மலேசியாவுல கப்பலில் வேலை பார்க்கிறான். அப்போதான் கப்பலில் பயணம் செய்த லண்டன்கார பெண் ஒருத்தி, "இதைவிட பெரிய வேலை கிடைக்கணும்னா லண்டனிலுள்ள ஒரு வெப்சைட் அட்ரசுக்கு 1600 ரூபாய் டெபாசிட் பண்ணுங்கள்'னு சொல்லியிருக்கா. என் பையனும் பணம் கட்டி மெம்பர் ஆகியிருக்கான். அந்த வெப்சைட்டிலிருந்து "நீங்க ஆசைப்படுற மாதிரி வேலை ரெடியாயிடுச்சு, கை நெறைய சம்பளம். ஆனா அந்த வேலைக்கு கொஞ்சம் பணம் செலவாகும்'னு இவனுக்கு இ-மெயில் அனுப்பியிருக்கா அந்தப் பொண்ணு. இவனும் வீட்டுக்குக்கூட பணம் அனுப்பாம கிட்டத்தட்ட 11 லட்சம் பேங்க்ல அவ சொன்ன அக்கவுண்ட்ல எல்லாம் பணம் போட்டிருக்கான்.

ஆனா, அவ சொன்ன தேதியில் வேலை வாங்கித் தராம "நீங்க டெபாசிட் பண்ணின கம்பெனி நஷ்டமாயிடுச்சு. அதனால அரசாங்கமே அந்த கம்பெனியை எடுத்துக்கிட்டு உங்களை மாதிரி பணம் கட்டிய எல்லோருக்கும் நஷ்டஈடு வழங்கியிருக்கு. அதுல உங்களுக்கு ஒரு கோடியே 30 லட்சம் கொடுக்க முடிவு செய்யப்பட்டிருக்கு. நேரடியா உங்க வீட்லேயே வந்து எங்க கம்பெனி ஆள் பணத்தைக் கொடுப்பாரு. ஆனா, வெளிநாட்டிலிருந்து இந்தியாவுக்கு இவ்ளோ பெரிய தொகையை எடுத்துட்டு வரணும்னா சில நடைமுறை செலவுகள் இருக்கு. அதனால வர்றவர் கிட்ட ஒருலட்சத்து 30 ஆயிரம் மட்டும் கொடுத்துடுங்க'னு மெயில் மூலமா அவ சொல்ல... அதை என் மகன் எங்கிட்ட போன்ல சொன்னான். ஒருகோடியே 30 லட்சம் பணத்தை கொடுக்கிறவங்க... அதிலேயே ஒரு லட்சத்து 30 ஆயிரத்தை இந்தியா வுக்கு கொண்டுவரும் நடைமுறை செலவுகளுக்கு பயன்படுத்திக்கிட்டு மீதி தொகையை நம்மகிட்ட கொடுக்க லாமே? அப்புறம் ஏன் புதுசா பணம் ரெடிபண்ண சொல்றாங்கன்னு டவுட் வர... எங்களுக்குத் தெரிஞ்ச புதுக் கோட்டை இன்ஸ்பெக்டரிடம் தகவலைச் சொன்னோம். அவரும்.. பணம் கொண்டு வர்ற பார்ட்டி வர்ற அன்னைக்கு மஃப்டியில வந்தாரு'' என்று சொல்ல... அவனை மடக்கிப் பிடித்த இன்ஸ்பெக்டர் ஜோதிராமிடமே பேசினோம்.

""மும்பை வழியா பெங்களூரு வந்து அப்படியே திருச்சிக்கு வர்றதா தகவல் சொல்லியிருந்தான். தசாவதாரம் ஃப்ளக்சர் கமல் ரேஞ்சுக்கு ஃபாரினர் வந்து இறங்குவான்னு எதிர்பார்த்துக் காத்திருந்தோம். ஆனா மைக்டைசன் ரேஞ்ச்சுக்கு ட்ரக்கிங் பேக்குடன் இறங்கி "ஷாக்' கொடுத்தான் நைஜீரிய இளைஞன். அப்பவே அவன்மேல எனக்கு சந்தேகம் தொற்றிடுச்சு. ஆறுமுகத்தின் உறவினர்போல நின்னு நான்தான் அவனை ரிசீவ் பண்ணினேன். "உலகின் பல இடங்களுக்குப் போய் நஷ்டஈடு தொகையைக் கொடுத்துட்டு வர்ற பொறுப்பை எங்க கம்பெனி எனக்கு கொடுத்திருக்கு'ன்னுலாம் பில்ட்-அப் கொடுத்தவன் "உங்களுக்கு ஏதாவது வேலை வேணும்னா சொல்லுங்க... ஒபாமா எனக்கு வேண்டப்பட்டவர்தான்'னு சீரியஸா சொல்லி காமெடி பண்ண ஆரம்பிச்சிட்டான். பிரகாஷோட அப்பா ஆறுமுகத்தோட வீட்டுக்குப் கூட்டிட்டுப்போனதும் கதவு ஜன்னலை எல்லாம் மூடச் சொன்னான்.

பேக்கில் வைத்திருந்த கருப்பு நிற பணக்கட்டுகளை எடுத்து "இது லண்டன் பணம். இந்திய போலீசுக்கு தெரியக்கூடாதுன்னு தான் இப்படி கலர் மாற்றிக் கொண்டு வந்தேன்'னு சொன்ன வன்... உடைந்து போயிருந்த கெமிக்கல் பாட்டிலிலிருந்த கெமிக் கலை எடுத்து தடவி அதை ஃபாரின் பணமாக மாற்றினான். மூணு நோட்டுகளை அப்படி பண்ணினவன் கெமிக்கல் பாட்டில் உடைஞ்சு போனதால மும்பையில போயிதான் கெமிக்கல் வாங்கிட்டு வரணும், அதுக்கு எட்டாயிரம் வேணும்னு கேட்டவன், "இந்தப் பணப்பை இங்கேயே இருக்கட்டும் இந்த ஊர்ல போலீஸ் பிரச்சினை ஜாஸ்தியா இருக்கும், கேர்ஃபுல்'னு எங்கிட்டயே சொல்லிட்டு கிளம்ப ... சிரிப்புதான் வந்துச்சு. "பொறுத்தது போதும் பொங்கி எழு மனோகரா'ங்கிற மாதிரி அவனோட ஃபிராடு வேலைகளால் பொங்கி எழுந்த நான் அருகிலுள்ள உளவுத்துறை போலீசுக்கு தகவல் கொடுக்க... இதை தெரிஞ்சுக்கிட்டவன் எஸ்கேப் ஆகி ஓட ஆரம்பிச்சுட்டான். உடனே மடக்கிப் பிடிச்சு பக்கத்திலுள்ள போலீஸ் ஸ்டேஷனில் ஒப்படைச்சேன்'' என்கிறார் சிரித்துக்கொண்டே.

திருச்சி மாநகர பொருளாதார குற்றப்பிரிவு இன்ஸ்பெக் டர் நீதிமோகனிடம் கேட்டபோது... ""இந்த நைஜீரிய டுபாக்கூர் இளைஞன் பேரு பென்சன். ஆரம்பத்துல "எனக்கும் இந்த மோசடிக்கும் சம்பந்தமில்லை'னு அடம் பிடிச்சிக்கிட்டிருந்தவனை "தகுந்த' முறை யில் விசாரிச்சப்போதான் "வேலை வாங் கித் தர்றோம்'னு இந்த மாதிரி இ-மெயில் அனுப்பி பணமோசடி செய்வதை பெரிய நெட்வொர்க்கா கவே செயல்படறதைச் சொல்லி அதிர்ச்சி கொடுத்தான். மறுநாள் காலையிலேயே புழல் சிறையில் அடைக் கப்பட்டதால் முழுமையா இன்னும் தகவல்கள் தெரியல'' என்கிறார்.

ஏமாந்த ஆறுமுகத்தின் குடும்பமோ "நஷ்டஈடுகூட வேணாம்ங்க. என் பையன் டெபாசிட் கட்டின 11 லட்ச மாவது திரும்ப கிடைக்குமா?' என்று இலவு காத்த கிளி யைப்போல் காத் திருக்கிறார்கள்.

No comments:

Post a Comment