Sunday, April 25, 2010
நானும் திருடன்! நீயும் திருடன்! -அயோக்கிய ஐ.பி.எல். கூடாரம்!
shockan.blogspot.com
நாடு முழுவதுமுள்ள ஐ.பி.எல். அணிகளின் அலுவலகங்கள், அதன் உரிமையாளர்களின் வீடுகள், தொலைக்காட்சி நிலையங்கள் என சீறிப் பாயும் வருமான வரித்துறையின் ரெய்டு நடவடிக்கைகள் ஐ.பி.எல். குறித்த சர்ச்சைகளை கிரிக்கெட் விளையாட்டு களத்தைத் தாண்டி அரசியல் தளத்துக்கு கொண்டு வந்துள்ளது.
மத்திய அரசின் இந்த நடவடிக்கைகளின் எதி ரொலியாக, ""ஐ.பி.எல்.லை அரசே ஏற்க வேண்டும், அதன் தலைவர் லலித் மோடியை பதவி நீக்கம் செய்ய வேண்டும்'' என்கிற கோஷங்கள் எழுந்துள்ளன.
இந்த கோஷங்களை எழுப்புபவர்களின் பின்னணியில் ஒரு அரசியல் சித்து விளையாட்டு இருக்கிறது. ""மொத்தம் 8200 கோடி என கணக்கு காட்டப்படும் 10 ஐ.பி.எல். அணிகளின் இன்றைய சந்தை மதிப்பு 66,000 கோடி ரூபாய். இந்த ஊழல் சர்ச்சைகளில் இதுவரை சரத்பவார், பிரபுல் படேல், சசிதரூர் என மூன்று மத்திய அமைச்சர்களின் முதலீடுகள் வெளியே தெரிந்திருக்கிறது. இன்னமும் வெளிவராத அரசியல் வாதிகளின் முதலீடுகள் நிறைய இருக்கிறது'' என அரசியல் கோணத்தில் நடைபெறும் சம்பவங்களை விளக்குகிறார்கள் கிரிக்கெட் உலக சீனியர்கள். சரத்பவார் கிரிக்கெட் வாரிய தலைவர் பதவியிலிருந்து ஒதுங்கும் போது சட்டப்படி லலித்மோடி தான் தலைவராக வந்திருக்க வேண்டும். ஆனால் அவரிடம் ஐ.பி. எல். என்கிற அமைப்பை உருவாக்கும் பொறுப் பை கொடுத்துவிட்டு தனது கைத்தடி யான ஷஷாங் மனோகர் என் பவரை தலைவராக்கி விடுகிறார் சரத்பவார்.
அடுத்த வருடம் முடியும் மனோ கரின் பதவிக்கு பிறகு தென்னிந்தியா வுக்கு சுழற்சி முறையில் வரும் தலைவர் பதவியை பிடிக்க இருப்பவர் தற்பொழுது செயலாளராக உள்ள இந்தியா சிமெண்ட்ஸ் சீனிவாசன்.
சசிதரூர் விஷயத்தில் காங்கிரஸ் கட்சியோடு மோதிய லலித்மோடியின் சிறகுகளை வெட்ட சீனிவாசனையும் ஷஷாங் மனோகரையும் கையிலெடுத்த காங்கிரஸ், ஷஷாங் மனோகருக்கு ஒரு வருடம் பதவி நீடிப்பு தருகிறோம் என வாக்குறுதி கொடுத்து லலித் மோடிக்கு எதிராக கொம்பு சீவி விட்டுள்ளது.
சீனிவாசனோ, ""லலித்மோடி ஐ.பி.எல். டி.வி. ஒளிபரப்பு உரிமை சோனி நிறுவனத்துக்கு கிடைக்க 400 கோடி ரூபாய் லஞ்சம் வாங்கினார்'' என குற்றச்சாட்டு கிளப்பினார். பதிலுக்கு மோடி, ""இல்லை இல்லை சீனிவாசன் தான் 240 கோடி லஞ்சம் வாங்கினார்'' என எதிர்பாட்டு பாடினார். உடனே வருகிற 26-ந்தேதி கிரிக்கெட் வாரிய கூட்டம் நடத்தி, அதில் லலித்மோடியை நீக்கம் செய்வோம்'' என சீனிவாசன் அறி வித்தார். ""என்னை ஐ.பி.எல். லுக்கு 5 வருட தலைவராக நியமித்தது கிரிக்கெட் வாரியத்தின் 30 உறுப்பினர்கள் அடங்கிய பொதுக்குழுதான். அதில் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்கள் ஆதரவு இருந்தால்தான் என்னை பதவி நீக்கம் செய்ய முடியும்'' என லலித்மோடி பதில் சொன்னதோடு தனக்கு ஆதரவாக உறுப்பினர்களைத் திரட்ட ஆரம்பித்து விட்டார்.
இதனால் எரிச்சலடைந்த காங்கிரஸ் மோடியின் ஆதரவாளராக இருந்த சரத்பவாரை கூப்பிட்டு மோடிக்கு எதிராக வேலை செய்யுங்கள் என கேட்டுக் கொண் டது. அதற்கு செவி சாய்க்க சரத்பவார் மறுத்துவிட்டார்.
மோடியின் பணம் முதலீடு செய்யப் பட்டிருக்கிறது என நம்பப்படும் பஞ்சாப், ராஜஸ்தான், கல்கத்தா அணிகளின் மீது நடவடிக்கை எடுத்து வருமான வரித் துறைக்கு உத்தரவிட்ட காங்கிரஸ், ஐ.பி.எல். அணிகளின் உண்மையான உரிமை யாளர்கள் யார் என தெரிய வில்லை. நிறைய நிழ லான வழியில் சம்பாதித்த பணம் இந்த அணிகளில் பாய்ந்திருக்கிறது என வருமான வரித்துறையை வைத்து சொல்ல வைத்தது.
""ஐ.பி.எல். அணிகள் ஒவ்வொன்றும் கிரிக்கெட் கண்ட்ரோல் வாரியத்தின் மூலம் வருடா வருடம் வருமான வரி கணக்கு செலுத்தி வருகின்றன. ஐ.பி.எல். உரிமையாளர்கள் யார் யார் என வெளியுலகுக்கு சொல்லலாம் என நான் ஏப்ரல் மாதமே அனைத்து உரிமையாளருக்கும் சொன் னேன். சீனிவாசன்தான் அந்த முயற்சியை தடுத்து விட்டார்'' என மோடி சூடாகவே பதில் சொல்லியிருக்கிறார்.
உடனே வருமான வரித்துறையை, ஐ.பி.எல்.லை ஒளிபரப்பும் சோனி மேக்ஸ் நிறுவனத்தின் மீது ஏவிவிட்ட மத்திய அரசு, சரத்பவாருக்கு பிரஷர் கொடுத்து அவர் மூலமாக மோடியை விலக சொல்லி எச்சரிக்கை கொடுத்துள்ளது.
பவார் தரப்பிலிருந்து, சீனிவாசன் மீதும் நடவடிக்கை தேவை என சொல்ல, சீனிவாசனின் சென்னை கிங்ஸ் அணி மீதும் வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.
மோடி தன் பங்குக்கு விடாமல் ""நானும் திருடன், நீயும் திருடன். நீ என்னை காட்டிக் கொடுத்தால் உன்னை நான் காட்டிக் கொடுப் பேன்'' என்கிற பாணியில் தினமும் ஒரு மத்திய அமைச்சர் பெயரை மீடியாவுக்கு சொல்லி வருகிறார்.
இறுதி யுத்தம் 26-ம் தேதி நடக்கும். அன்று நடைபெறும் கிரிக்கெட் வாரிய கூட்டத்திற்கு இரு தரப்பும் தயாராகி வருகிறது. ஐ.பி.எல்., அசிங்கத்தின் உச்சபட்ச விளையாட்டு.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment