shockan.blogspot.com
டெல்லி : மத்திய அமைச்சர் மு.க.அழகிரி, 6 மாத காலத்தில் 61 முறை விமான பயணம் மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
தகவலறியும் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விகளுக்கு மத்திய ரசாயனத்துறை அமைச்சகம் பதிலளித்துள்ளது. மத்திய அமைச்சராக அழகிரி பதவியேற்றது முதல் தொடர்ந்து 6 மாத காலத்தில், டெல்லியில் இருந்து மதுரைக்கு 61 தடவை விமான பயணம் மேற்கொண்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த பயணங்களுக்கான விமானக் கட்டணத் தொகை 15 லட்சம் ரூபாய் என்றும் அமைச்சகம் கூறியுள்ளது. அமைச்சரவைக் கூட்டங்கள், நாடாளுமன்ற நிகழ்ச்சிகள் போன்றவற்றில் அவர் எத்தனை தடவைகள் பங்கேற்றுள்ளார் என்ற கேள்விக்கு இரசாயன அமைச்சகம் பதில் அளிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
No comments:
Post a Comment