shockan.blogspot.com
""ஹலோ தலைவரே... .... ஜாக் கம்யூனிகேஷன் கேபிள் நெட்வொர்க் தொடக்க விழா, அதையொட்டி நடந்த சம்பவங்கள் பற்றி தகவல் வந்ததா?''
""சித்திரை 1-ந் தேதியன்னைக்கு மு.க.அழகிரி தன் மனைவி காந்தியோடு சென்னைக்கு வந்து, ஜாக் கம்யூனி கேஷன் நிறுவனம் தொடக்க விழாவுக்காக கலைஞரிடம் வாழ்த்துப் பெற வந்திருக்கிறார். அப்ப கலைஞர் கேபிள் ஆரம்பிக்கிறது தொடர்பான தனது அதிருப்தியையும் கட்சி விஷயத்தில் ஸ்டாலினோடு போட்டிக்கு நிற்பது சம்பந்தமாக கோபப்பட் டாருங்கிறது ஒரு தரப்பு சொல்லும் தகவல். உனக்கு என்ன தகவல்?''
""நான் அழகிரி தரப்பில் விசாரித்தேங்க தலைவரே... என்னவோ கேபிள் நெட்வொர்க்னு சொல்றாங்களே.. அந்த ஜாக் ஜெயராமன் பற்றி விசாரிச்சப்ப சரியா இல்லை, சி.பி.ஐ. விசாரணைகூட அவர் மேல இருக்காம்மேன்னு கலைஞர் சொன்னாராம். அதற்கு அழகிரி, நான் ஜெயிலில் இருந்தப்ப ஜெயராமன் நிறைய உதவிகள் செய்ததால் என் பையன் துரைதயாநிதியையும் அவரு பையன் கமலேஷையும் வச்சு இதை தொடங்குறேன்னு சொல்லியிருக்கிறார். இந்த சந்திப்பு நடந்தப்ப கலைஞர், அழகிரி, காந்தி மூணு பேரும்தான் இருந்திருக்காங்க. இதையடுத்து மீடியாக்கள் மைக் நீட்ட அழகிரி வழக்கம் போல கலைஞர் சொன்னால் மந்திரி பதவியிலிருந்து விலகத்தயார். ஆனா கனிமொழிக்காக இதைச் செய்கிறேன்னு யார் சொன்னது? என பேட்டியளிக்க, மறுநாள் கலைஞரிடமிருந்து, என்னையும் பேராசிரிரையும் தவிர யாரும் மீடியாக்களுக்கு பேட்டி கொடுக்கக்கூடாதுன்னு அறிக்கை வந்தது.''
""கலைஞர் இட்ட இந்த கட்டளையை ஏற்காதவர்கள் தி.மு.க.வில் இருக்க முடியுமா என்ன? சரி, சர்ச்சைக்குரிய அறிக்கையில் தெளிவாகவே சொல்கிறார் கலைஞர். அதாவது, இந்த அறிக்கை உறுதியானதும், இறுதியானதும் என்கிறார். கழகம் எடுக்க வேண்டிய முடிவுகள், ஈடுபட வேண்டிய செயல்கள், மற்றக் கட்சிகளுடனான உறவுகள் குறித்து பொதுக்குழு, செயற் குழு முடிவுகளை நானும் பேராசிரியரும்தான் பத்திரிகைகளுக்கு சொல்ல வேண்டும். வேறு யாராயினும், எவராயினும், எந்தப் பொறுப்பில் இருப்பவராயினும் நாங்கள் வெளியிடும் கருத்துகளை செயல்படுத்துவது மட்டும் அவர்களின் பணி, இதை மீறி நடந்தால் கழக கட்டுப்பாடு என்ற நிலையில் ஏற்க முடியாது என்று மிகத் தெளிவாக அறிக்கையில் சொல்லியுள்ளாரே!''
""நித்யானந்தர் வழக்கை சி.பி.ஐ.யிடம் ஒப்படைக்கணும்ங்கிற லெனின் தர்மானந்தாவின் மனுவை ஹை கோர்ட் தள்ளுபடி செய்து விட்டதே... சாமியார் மீது நியாயமான நடவடிக்கையை பாதிக்கப்பட்ட பலரும் எதிர்பார்த்திருந்தாங்கப்பா...''
""நீதிபதி ரகுபதியோட தீர்ப்பை கவனமா படிச்சீங்களா தலைவரே... .. அவர் சொன்னதை படிக்கிறேன் கேளுங்க.. நாட்டில் மிகப்பெரிய தலைவர்களெல்லாம் அறிவுறுத்திய பிறகும் இதுபோன்ற சாமியார்களை கண் மூடித்தனமாகப் பின்பற்றுபவர்களை இன்னமும் சரிசெய்ய முடியவில்லையே என்பது துரதிர்ஷ்ட வசமானது. தங்களது நலனுக்காக அப்பாவி குடிமகன்களை சாமியார்கள் ஏமாற்றுகிறார்கள். இதுதொடர்பாக அரசு ஏஜென்சிகள் விழிப்புடன் பிரச்சா ரம் நடத்த வேண்டும். அப்போது தான் இதுபோன்ற மோசடி பேர்வழிகள் யார் என்பது கண்டு பிடிக்கப்படும். நித்யானந்தாவின் பக்தரான மனுதாரரின் மத உணர்வு கள் புண்படுத்தப்பட்டுள்ளன. தமிழ்நாடு மற்றும் பல மாநிலங்களில் மோசடி மூலம் கணிசமான பணம் வசூல் செய்துள்ளனர். எனவே இந்த வழக்கை மத்திய ஏஜென்சி விரிவாக விசாரிக்க வேண்டும். ஆனால், கர்நாடக மாநிலத்தில் உள்ள ஆசிரமம் ஒன்றில் நடந்த சம்பவம் தொடர்பாக இந்த வழக்கு தொடரப் பட்டுள்ளது. கர்நாடக மாநில சிறப்பு புலனாய்வுப் பிரிவில் இது நிலுவையில் உள்ளது. அந்த மாநில சிறப்பு புலனாய்வுப் பிரிவு பற்றி குற்றச்சாட்டு எதுவும் இல்லாததால், இந்த வழக்கை சி.பி.ஐ. விசாரணைக்கு மாற்றுவதற்கு ஏற்ற வழக்காக கருத முடியாதுன்னு நீதிபதி உத்தரவிட்டிருக்கிறார்.''
""ஆக நித்யானந்தரின் மோசடிகள், கோர்ட்டிலும் தெளிவா பதிவா யிடிச்சி. கர்நாடகப் போலீசார் நியாயத்தின் பக்கம் நின்று விசாரிக்கணும்.''
""அடுத்த மேட்டருக்கு வர்றேங்க தலைவரே... ... பிரதமர் அலுவலகத்திலிருந்து பிரபல பத்திரிகைகளில் பணியாற்றும் திறமையான பத்திரிகையாளர்களை தொடர்புகொண்டு, அவர்களை வேறு பத்திரிகையில் ஆசிரியரா நியமிப்பதற்கான வேலைகள் தொடர்ந்து நடந்துக்கிட்டிருக்குது. இது அமெரிக்க பாணியிலான வேலை. அதாவது, முக்கியமான எல்லா பத்திரிகைகளிலும் தங்களுக்கு வேண்டியவர் களை ஆசிரியரா நியமித்துவிட்டால், மீடியாக்கள் மொத்தமும் ஆளுங்கட்சிக்கு சாதகமா அமைந்துவிடும். இதில்தான் பிரதமர் அலுவலகம் கவனம் செலுத்திக்கிட்டிருக்குது. இது ஒரு பக்கம்னா, இன்னொரு பக்கம் பிரதமருக்கு ஆலோசனைகள் வழங்கும் தேசிய ஒருமைப்பாட்டு குழுவில் பிரபல பத்திரிகைகள்-சேனல்களில் உள்ளவங்க நியமிக்கப்பட்டிருக்காங்க.''
""சோனியா, கலைஞர் ஆகியோரும் இந் தக் குழுவில் உறுப்பினரா இருக்காங்களே!''
""பல கட்சிகளைச் சேர்ந்தவர்களும் உறுப்பினர்களாக இருக்கும் தேசிய ஒருமைப்பாட்டுக் குழுவில் பத்திரிகையாளர்களும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டிருக்காங்க. தமிழ்நாட்டிலிருந்து இந்து பத்திரிகையின் என்.ரவி, சன் டி.வி. செய்தி ஆசிரியர் ராஜா இருவரும் உறுப்பினராகியிருக் காங்க. பத்திரிகை முதலாளிகளே இடம்பெறும் இந்தக் குழுவில் சன் டி.வியில் ஊழியரா இருக்கும் ராஜாவை, அந்த சேனலின் முதலாளி கலாநிதி மாறன் பெருந்தன்மையோடு சிபாரிசு செய் திருப்பதை பத்திரிகையாளர்கள் பலரும் பெருமையா பார்க்குறாங்க.''
""சட்டமன்றக் கூட்டத் தொடர் நடந்துக் கிட்டிருக்குதே... என்ன சிறப்பம்சம்?''
""13-ந்தேதி நீதித்துறை மானியக் கோரிக்கை யின் போது அமைச்சர் துரைமுருகனை அ.தி.மு.க. எம்.எல்.ஏ. கலைராஜன் கிண்டலாகக் குறிப்பிட, பதிலுக்கு அமைச்சர் ஒருமையில் எம்.எல்.ஏ.வை விமர்சிக்க இருவரது பேச்சும் அவைக்குறிப்பிலிருந்து நீக்கப்பட்டது. 15-ந்தேதி, இந்த விவகாரத் திற்காக அமைச்சர் மீது ஒழுங்கு பிரச்சினையைக் கிளப்பினார் ஓ.பி.எஸ். அப்ப கலைராஜன், சபாநாயகர் இருக்கை முன் வந்து, துரைமுருகனை அடிப்பது போல கைநீட்டிப் பேச, சபாநாயகர் ஆவுடையப்பன் அவரை எச்சரித்தார். கலைராஜனும் தன்னோட சீட்டுக்குத் திரும்பிவிட்டார். அமைச்ச ருக்கே பாதுகாப்பில்லாத வகையில் செயல்படும் கலைராஜன் மீது நடவடிக் கை எடுக்கணும்னு அமைச் சர் பரிதி கோரிக்கை வைத்தார். சபாவோ, என் எச்சரிக்கைக்கு உறுப்பினர் கட்டுப்பட்டு விட்டார். மீறினால்தான் நடவடிக்கைன்னு சொல்லி விவகாரத்துக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டார்.''
""இலங்கையின் தமிழீழப் பகுதியில் உள்ள வல்வெட்டித் துறையில் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் பிறந்த வீட்டைப் பார்ப்பது, அங்கு செல்கிற தமிழர்களின் உணர்ச்சிப்பூர்வமான வழக்கம். இது ராஜபக்சே அரசுக்குப் பொறுக்கலை. மாவீரர் நினைவிடங்களை இடித்தது போல, பிரபாகரன் வீட்டையும் இடித்து தரைமட்டமாக்கிவிட்டது. அந்த பக்கம் போகிற தமிழர்களையும் சிங்கள ராணுவம் கடுமையா அடிச்சி விரட்டுதாம். இன்னமும் இனவெறியோடதான் இலங்கை அரசு செயல்பட்டுக் கிட்டிருக்குது.''
மிஸ்டு கால்!
தே.மு.தி.க நிகழ்ச்சிகள் சரியாக கவரேஜ் ஆவதில்லை என்ற வருத்தத்தில் இருந்த விஜயகாந்த் சொந்தமாக கேப் டன் டி.வியைத் தொடங்கி விட்டார். எஸ்.சி.வி. கனெக்ஷனில் சிக்கலின்றி தெரிகிறார் கேப்டன். சன் டி.வி. தொடங்கப் பட்ட நாளான ஏப்ரல் 14-ல் கேப்டன் டி.வியும் தொடங்கப் பட்டிருப்பதை சென்ட்டி மென்ட்டாக சுட்டிக்காட்டு கிறார்கள் தே.மு.தி.க.வினர்.
கூட்டணியில் உள்ள கட்சிகளையும் ஆதரவு தரும் கட்சிகளையும் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெ, அழைத்துப் பேசுவதில்லை என்று இடதுசாரித் தலை வர்கள் வெளிப்படையாகவும், ம.தி.மு.க. தரப்பு முணுமுணுப் பாகவும் சொல்லி வந்தது. இந்நிலையில், விலைவாசி எதிர்ப்பு போராட்டத்திற்காக டெல்லித் தலைவர்கள் பாணியில் ஏப்ரல் 16-ந்தேதி அ.தி.மு.க. தலைமைக் கழகத் தில் ஜெ. அழைப்பு விடுத்த கூட்டத்தால் கூட்டணிக் கட்சிகளிடம் உற்சாகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தாழ்த்தப்பட்டவர் களுக்கான பஞ்சமி நிலங்களை யார் அபகரித்திருந்தாலும் மீட்பது கடமை என விடு தலைசிறுத்தைகள் சார்பில் வழங்கப்பட்ட அம்பேத்கர் சுடர் விருது விழாவில் முதல் வர் பேசினார். ஆண்டு தோறும் விருதுகளை தன் கையால் வழங்கும் திருமா, இம்முறை கலைஞருக்கு மட் டும் தன் கையால் வழங்கி விட்டு, மற்றவர்களுக்கு கலை ஞர் கையால் வழங்கினார். அத்துடன், நினைவுப் பரிசாக புதிய சட்டமன்ற வளாகத்திற் குள் கலைஞர் நுழைவது போல வடிவமைக்கப்பட்ட பரிசையும் வழங்கினார். விழா முடியும் நேரத்தில்தான் இந்த பரிசு மேடைக்கு வந்தது. தலைமைச் செயலகமே சீக்கிர மாக வந்துவிட்டது. நினைவுப் பரிசு தாமதமா வருதே என்று கி.வீரமணி கமெண்ட் அடிக்க கலகலப்பாக சிரித்த கலைஞர், அந்த நினைவுப்பரிசின் வடி வமைப்பைப் பார்த்துவிட்டு திருமாவை பாராட்டினார்.
தலித் கிறிஸ்துவர்களை அட்டவணை இனத்தவரில் சேர்க்க வலியுறுத்தி சி.பி.எம் சார்பில் நெல்லையில் நடந்த மாநாட்டில் கலந்துகொண்டார் பிருந்தாகாரத் எம்.பி. அவர் பேசும்போது, சி.பி.எம் போராட் டத்தினால்தான் தலித் கிறிஸ் துவர்களின் நலனுக்காக ரங்கநாத் மிஸ்ரா கமிஷன் போடப்பட் டது. அந்த கமிஷனின் அறிக் கையை நடைமுறைப்படுத்த வேண்டும். தலித் கிறிஸ்துவர் களை தாழ்த்தப்பட்டவர்கள் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்று பிரதமருக்கு தமிழக முதல் வர் கடிதம் எழுதியிருப்பதை பாராட்டுகிறேன். இந்த விஷ யத்தில் நாங்களும் அவரும் ஒரே நிலைப்பாட்டில் இருக்கிறோம் என கலைஞரைப் பாராட்டினார்.

No comments:
Post a Comment