Tuesday, April 27, 2010
ஆசின் வீட்டில் டோணி?
shockan.blogspot.com
சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் டோணி, மும்பையில் உள்ள நடிகை ஆசின் வீட்டுக்குச் சென்று அவருடன் பிரமாண்ட எல்.சி.டி. டிவியில் ஐபிஎல் போட்டியைப் பார்த்து ரசித்தார் என்று செய்தி வெளியாகியுள்ளது.
கிரிக்கெட் வீரர்களுடன் நடிகைகளை இணைத்துப் பேசுவது புதிதல்ல. அதிலும் டோணியை பல நடிகைகளுடன் இணைத்து தொடர்ந்து பேச்சு வருவது புதிதே அல்ல. சில காலமாக அவரை லட்சுமி ராயுடன் இணைத்து செய்திகள் வந்து கொண்டிருந்தன.
டோணி சென்னைக்கு வரும்போதெல்லாம் தவறாமல் லட்சுமி ராயைப் பார்ப்பார் என்று செய்திகள் கூறி வந்தன. அதேபோல ஒரு முறை டோணி தனது வீட்டுக்கு லட்சுமி ராயை அழைத்துச் சென்று வீட்டினருக்கு அறிமுகப்படுத்தி வைத்ததாக கூட செய்திகள் கூறின.
இந் நிலையில் லட்சுமி ராய் இடத்திற்கு ஆசின் வந்து விட்டதாக புதுச் செய்தி கூறுகிறது. ஆசின் மும்பையில் ஒரு வீடு வாங்கியுள்ளார். இங்கு தங்கியிருந்தபடிதான் இந்திப் படங்களில் அவர் நடித்து வருகிறார். முதலில் இங்கு ஆசினுடன் அவரது அப்பாவும் தங்கியிருந்தார். பின்னர் அவர்களுக்குள் கருத்து வேறுபாடு வரவே அப்பா தனியாகப் போய்விட்டதாக கூறப்பட்டது.
இந் நிலையில், கடந்த 21ம் தேதி லோகன்ட்வாலா பகுதியில் உள்ள ஆசினின் வீட்டுக்கு டோணி வந்தாராம். பின்னர் ஆசினுடன் இணைந்து, மும்பை இந்தியன்ஸ், ராயல்ஸ் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதிய அரை இறுதிப் போட்டியை பிரமாண்ட எல்சிடி டிவியில் பார்த்து ரசித்தார் டோணி என்று செய்திகள் கூறுகின்றன.
டோணியுடன் இணைந்து 2 விளம்பரப் படங்களில் ஆசின் நடித்தபோதுதான் அவர்களுக்குள் நட்பு ஏற்பட்டதாம். இந்த நட்பு தற்போது மேம்பட்டிருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன.
டோணி வந்திருப்பதை அறிந்து ஆசின் வீட்டின் முன்பு ரசிகர்கள் கூடி விட்டனராம். இருந்தாலும் அவர்களிடம் சிக்காமல் நைசாக நழுவி விட்டாராம் டோணி.
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment