Sunday, April 11, 2010

நித்யானந்தா & சிஷ்யர்களின் லீலைகள்!- shockan


""ஆசிரமத்தில் காம அக்கிரமம் செய்து ஆனந்தப்படுவது நித்யானந்தா மட்டும் தானா? அங்கு இருக்குற அநேக ஆனந்தாக்களும் அதையேதான் செய்கிறார்கள். வாய்ப்பு கிடைக்காதவரைதான் குற்றவாளி என்பார்கள். ஆனால் இவர்கள் திட்ட மிட்டே வாய்ப்பை ஏற்படுத்திக் கொண்டு குற்றம் செய்கிறார்கள். ஆன்மிக சேவைக்கு ஆசைப்பட்டுப் போன நான் சாமியாரினி யாக அங்கே தங்க ஆரம்பித்தேன். ஆனால் ஆனந்தாக்களின் அபிலாஷை தீர்க்கும் செக்ஸ் பொம்மையாகத்தான் என்னை பயன்படுத்தினார்கள்.''

-இப்படி தனக்கு நேர்ந்த கொடுமையை சொல்லத் தொடங்கினார் அந்த சாமியாரினி!

""அறிவைக் குறிக்கும் சொல்லை உடைய ஆனந்தா அவர். அவர்தான் நித்யா னந்தாவின் தத்துவங்களை தொகுத்து புத்தகம் போடும் வேலை செய்வதில் முக்கியமானவர்.

திடீரென நடுராத்திரிகூட என்னை கூப்பிடுவார் இந்த ஆனந்தா. போவேன். "எழுதுறதுக்கு மூடு வரல. பக்கத்துல உட்கார்' எனச் சொல்லி இம்சை கொடுப்பார். கண்ட இடத்தில் கை வைப்பார். நான் கோபத்தை அடக்கிக் கொண்டு எழுந்து வந்துவிட்டேன்.

மறுநாள்... நித்யானந்தாவிடம் போய் ‘இந்த ஆனந்தா செய்யும் தொல்லைகளைச் சொன்னேன்.

"நீ அவன் சொல்றபடி நடந்துக்க. சீக்கிரமே முன்னுக்கு வந்திடுவே' என குண்டைத்தூக்கிப் போட்டார் நித்யானந்தா. அன்று இரவு இந்த ஆனந்தா தன் அறைக்கு வரச் சொன்னார்.

"என்னடி? சாமிகிட்ட என்னயப்பத்தி போட்டுக் கொடுக்குறியா? சாமியால என்னை ஒண்ணும் பண்ணமுடியாது. சாமி யோட லீலைகள், ரகசியங்கள் எல்லாமே எனக்குத் தெரியும். அதனால் சாமி என்னை ஒண்ணும் பண்ண முடியாது. நான் சொல்ற படி நடந்துக்கிட்டா... இந்த ஆசிரமத்தில் முக்கியமான பதவியை உனக்கு வாங்கிக் கொடுப்பேன். இல்லேன்னா.. திருட்டுப் பட்டம் கட்டி அசிங்கப்படுத்துவேன். அந்தரங்கமா நீ அட்ஜஸ்ட் பண்ணிட்டுப் போனா உனக்கு நல்லது...' என்றபடி என்னை கட்டியணைத்தார்.

காவி உடையில் பாவம் செய்யலாமா? என இந்த ஆனந்தாவிடம் நான் கேட்டேன். அதற்கு ‘"சிசுபாலன்- கிருஷ்ணன் கதை தெரியுமா?' எனக் கேட்டபடியே என் ஆடைகளை களைந்தார்.

பகவத்கீதையில் ஒரு கதை இருக்கு. கிருஷ்ணனைப் போலவே தன்னை எண்ணிக்கொண்ட சிசுபாலன் தனக்கு ஞானம் வந்திட்டதாவும், இந்த ஞானம் உங்களுக்கும் கிடைக்க வைக்கிறேன்னு சொல்லி கோபியர் பெண்களை தன்னோட வச்சுக்கிட்டு அனுபவிச்சிட்டு வந்தான். கிருஷ்ணரும் தன்னோடு கோபியர்களை வச்சிக்கிட்டு இருந்தார். ஆனா கிருஷ்ணனுக்கு நல்ல பெயர். சிசுபாலனுக்கு கெட்ட பெயர். இதனால் ஒரு சந்நியாசி வியாசமுனிவரிடம் போய் கேட்டார்... ‘"முனிவரே... கிருஷ்ணர் எதையெல்லாம் செய்கிறாரோ... அதையே தான் சிசுபாலரும் செய்கிறார். பிறகு ஏன் சிசுபாலரின் செயல்களை தப்பு என்றும், கிருஷ்ணனின் செயல்களை ‘மதுரபாவம்னு சொல்றாங்க?' -"மதுரபாவம்னா என்ன தெரியுமா? இறைவனை காதலனாக காண்பது. அதாவது ராசலீலை. ராசலீலை என்றால் ‘இறைவன் நடத்தும் நாடகம்'னு அர்த்தம். கிருஷ்ணன் செஞ்சா சரி, சிசுபாலன் செஞ்சா தப்பா?' எனக் கேட்டார்.

அதற்கு வியாசர் சொன்னார்... ‘"கோபியருக்கு கிருஷ்ணன் ஞானமுடையவர் என்பது தெரியும். அதனால் கோபியர் பெண்கள் கிருஷ்ணனோடு கொண்ட உறவு ஞானம் சார்ந்தது. இறைநிலையை அடை வதற்காகவும், அனுபவிப்பதற்காகவும்தான் கிருஷ்ணனை கோபியர்கள் சுற்றிச் சுற்றி வந்தார்கள். நீ வேறு யாருடன் உறவு கொண்டாலும் ஞானமில்லாத சிசுபால னோடு வச்சுக்கிட்ட உறவுக்கு சமம். என்னுடனோ.. அல்லது நித்யானந்தருடனோ உறவு வைத்துக் கொண்டால்... அது ஞானம் சார்ந்த உறவு. இறைவனைக் காண... இறைவனாக மாற இதுவும் ஒரு வழி' என கதையைச் சொன்னபடியே... என் கதையை முடித்துவிட்டார்.

இப்படித்தான் ஏதாவது ஒரு கதை சொல்லி பெண்களை கெடுத்துவிடுகிறார்கள் இந்த ஆனந்தாக்கள்'' என தன் சோக கதையைச் சொன்னவர்... இன்னொரு பெண்ணுக்கு நேர்ந்த கதையையும் சொன்னார்.

""அவ ரொம்ப ஸ்டைலா, சினிமா நடிகைகளை விட அழகா இருப்பா. அவளோட அப்பா ஒரு ஹோமியோபதி டாக்டர். அந்த பொண்ணுக்கும் சிகிச்சைகள் தெரியும். ஆசிரமத்தில் சேவை செய்வதற் காக வந்தாள். யாருக்காவது உடல்வலி ஏற்பட்டால் உடனே மசாஜ் மூலம் சிகிச்சை செய்து குணப்படுத்து வாள். அவளையும் இந்த ஆனந்தா... கண்வைத்தார். ஆனால் அந்தப் பெண் பிடி கொடுக்கவே இல்லை. இதனால் எல்லார் முன்னிலையிலும் அந்தப் பொண்ணை திட்டுவது, அவமானப்படுத்துவது.... எவ்வளவு வேலை செய்தாலும்.. ‘என்ன வேலை செஞ்சு கிழிச்சே... என திட்டுவதுமாக இருந்தார் இந்த ஆனந்தா.

இந்த ஆனந்தாவுக்கு "சு' என்ற எழுத்தில் தொடங்கும் ஒரு பெண் உதவியாளர் உண்டு. கிட்டத்தட்ட எல்லாமே அவர்தான். அந்த டாக்டர் மகளை மடக்கித்தரச் சொல்லி ‘"சு'வுக்கு அஸைன் மென்ட் கொடுத்தார் இந்த ஆனந்தா.

நித்யானந்தரிடம் சமயம் கிடைக்கும் போதெல் லாம் "சு'வைப்பற்றி பெருமையாகச் சொல்லிச் சொல்லியே... ஆசிரமத்தில் ‘"சு'வுக்கு பெரிய அதிகாரமும் வாங்கிக் கொடுத்துவிட்டார் இந்த ஆனந்தா. அந்த அதிகார திமிரில் டாக்டர் மகளை பிரெய்ன் வாஷ் செய்தார். ஆனால் "சு' சொல்லியும் அந் தப் பெண் கேட் காததால் கோபமான இந்த ஆனந்தா டாக் டர் மகளை ஆசிரமத் தில் உள்ள பசு மடத் திற்கு அனுப்பிவிட்டார். அங்கே... சாணி அள்ளுவது, கொட்டத்தை சுத்தம் செய் வது, ரொம்ப அதிகாலையில் எழுந்து பால் கறப்பது.. போன்ற வேலைகளை செய்யச் சொல்லிவிட்டார் இந்த ஆனந்தா.

"ஒரு பசுவுக்கு செய்கிற சேவை கடவுளுக்கே செய்கிற சேவை' என்கிற இந்துமத தத்துவத்தை உணர்ந்திருந்த அந்தப் பெண் சாணி அள் ளும் வேலையைச் செய்தார்.

அன்று இரவு அந்தப் பெண்ணை கூப்பிட்ட இந்த ஆனந்தா... "தேவதை போல இருக்கிற நீ சாணி அள்ள லாமா? என் விருப்பப்படி நட... இந்த ஆசிரமத்தில் உனக்கு பெரிய மரியாதை யை ஏற்படுத்தி தருகிறேன்' எனச் சொன் னார். ஆனால் அந்தப் பெண் மசியவே இல்லை. திடீரென்று அந்தப் பெண்ணை பிடதி ஆசிரமத்தில் காணமுடியவில்லை. அப்புறம்தான் தெரிந்தது. படியாத அந்தப் பெண்ணை சேலம் ஆசிரமத்திற்கு மாற்றி விட்டார் இந்த ஆனந்தா.

இதே போல தனக்குப் படியாத ஒரு ஆந்திரப் பெண்ணை விபச்சாரி பட்டம் கட்டி அனுப்பினார் இந்த ஆனந்தா.

தியானத்திற்காக வந்த இந்தப் பெண்ணுக்கும், விருத்தாசலம் தியான பீட அமைப்பாளர் மகனுக்கும் காதல் வந்து விட்டது. துபாயில் பணிபுரியும் அந்த இளைஞன் ஆசிரமத்திற்கு வந்த போது இந்த காதல் உண்டானது. ஆனால் அந்தப் பெண்ணை அடையத் துடித்த இந்த ஆனந்தா... அந்தப் பெண்ணுக்கு ரொம்பவே இம்சை கொடுத்தார். ஆனால் அவளோ... "சாமி! நான் காதலிக்கிறேன். அவரையே கல்யாணம் செஞ்சுக்கப்போறேன். அதனால் என்னை விட்டுடுங்க' என கேட்ட போது... ‘"ஒரு நாள் நீ என்கூட இருப்பது உன் காதலனுக்கு தெரியவா போகுது? வாடீ!' என வம்பு பண்ண... அந்த பெண் மறுத்துவிட்டு வந்துவிட்டாள்.

உடனே... காதலிக்கும் பையனின் அப்பா வுக்கு போன் போட்டு, "அந்தப் பெண் ஹைதரா பாத்தில் விபச்சாரம் செய்தவள், நடத்தை கெட்டவள்' எனச் சொல்லிவிட... விஷயம் கேள்விப் பட்ட அந்தப் பெண் ஒரு நாள் முழுவதும் சாப்பிடாமல் ஆசிரம கோயிலிலேயே உட்கார்ந்து அழு தாள். ஆனால் அவளின் காதலனுக்கு அவள் மேல் ரொம்ப நம் பிக்கை. அதனால் உறுதியாக இருந்து... அந்தப் பெண்ணை கல்யாணம் செய்து கொண்டார். அன்று அந் தப் பெண் அழுத கண்ணீருக்கு இன்று இந்த ஆசிரமமே சீரழிந்து விட்டது....'' எனச் சொல்லி முடித்தார் அந்த சாமியாரினி.

இதேபோல பெங்களூரைச் சேர்ந்த ஒரு பெண் தியானத்திற் காக ஆசிரமத்திற்கு வந்த கிரண் என்ற இளைஞனை விரும்பினாள். அவளையும், அந்த காதலையும் கெடுக்க நித்யானந்தாவும், இந்த ஆனந்தாவும் செய்த சதிகள் நிறைவேறவில்லை. ‘"போங்கடா... நீங்களும் உங்க ஆசிரமமும்' என போய் விட்டது அந்த காதல் ஜோடி! ஆசிரமத் தில் உள்ள இசைத்துறை அட்ட காசங்கள் அதை விட மோசமானது என்று பல அதிர்ச்சிகரமான தகவல்களை வெளியிட்டார் இன்னொரு பெண்.

""ரெக்கார்டிங் தியேட்டரில் என்ன இருக்கும்?

வாத்தியக்கருவிகள் இருக்கும்.

ஆனால் அங்கே கர்ப்பத்தடை மாத்திரை கள்தான் ஸ்டிப், ஸ்டிப்பாக இருக்கும். அது பற்றி விபரமாக சொல்கிறேன்.....''

8 comments:

  1. wwat a great god he is sorry fraud

    ReplyDelete
  2. wat a great god he is sorry fraud..................

    ReplyDelete
  3. you are a good fiction writer...

    ReplyDelete
  4. Ore orukka indha Bidadi centre for sex operation oru friendukaka ponom.Oru 100 adi thooradhula irundhu paartha oru nokkula therindhu vittadhu indha Rajsekaran eppadiyaana aalunnu. Iraivan aankalaivida penkalukku elidhaai aankalin ulnokkathai arindhukolvadharkaana arivai koduthu irukaan. Innervoice eppodhum sollum thavarai thavaru enru. Aanmeekathula romba eedupaadu ullavarkal elithaai ivarkalidam irundhu thappi varamudiyum velyil. Indha penkal ellorum yen indha bloody fellows sonnapadi nadandhu kondaarkal enru puriave illai. Namma indha Rajsekaran and companya mattum kurai solluvadhu sari alla. Vera ellarukum arivu illaya? Indha penkal ellarum uthamikala? Oru aanin paarvai pinnirundhu pattaale podhum penkal adhai unara mudium. Ippadi ellame panna idam koduthu irukaangale. These girls are also to be punished. :( Indhia penkal izhivaana kaaryangal seidhu vittu ippodhu kannai kasakkuvadil arthame illai. The moment they come to know about this place they would have come out by saying some family reason. very sad.

    ReplyDelete
  5. Which TV serial actress is that moron Nakeeran put up in his magazine. He can stoop to any level to make money. As long as there are idiots buying his filthy mags, he will continue to thrive on sensationalism. Now that the truth will come out and Lenin, Nakeeran, DMK, SUN TV coterie will get exposed, they are continously coming with new ideas to further malign a great saint of our times and his ashrams. Hell awaits these guys in this lifetime itself. Nobody can save them.

    ReplyDelete
  6. This guy Lenin thinks that he can fool people by concocting stories. Why doesn't the brahmacharini give a formal complaint to the Karnataka police. They have already promised to keep the identity secret, so what's the problem? Since it is a bundle of lies, they are not approaching the police. Why hasn't he said how he got the money to buy the camera? This guy who comes from a poor family has been bought with money and is going around making false claims. He is doomed. Guess what, stand up dharma site doesn't have a no option under voting ! Does that ring a bell?

    ReplyDelete
  7. Nakeeran is a christian stooge. Just like he made money from Dr. Rajkumar's kidnap by Veerappan, here also he has made huge sums of money from christian missionaries. Shun this guy like the plague, so also DMK, SUN TV an other hooligans. Lenin and all the other conspirators are actually against Dharma. They have been bought with money to defame holy men in India.

    ReplyDelete
  8. Hey Dear Editor have always been wondering will there be such a saddist who can always find something wrong in others and publish that to the world and find happiness through that......... But now i found that you are none other than that saddist who have been publishing unnecessary things hurting sentiments and beliefs of people and finding happiness.. God shall reward you for this very soon and we will wait to see that. Make up mind before you get rewarded by god..... Do not play with God himself ....

    ReplyDelete