shockan
"கிணறுவெட்ட பூதம் கிளம்பிய கதையாக' என்பதுபோல்... ஒரு கொலை விவ காரத்தைத் தோண்டப்போய்... பல கண்றாவி பூதங்கள் கிளம்ப... அதிர்ச்சியில் விக்கித்துப் போயிருக்கிறார்கள் மதுரைக் காக்கிகள்.
மதுரை தெற்குவாசல் பஸ் ஸ்டாண்டில் காத்திருந்த கம்ப்யூட்டர் என்ஜினியரான 22 வயது கிருஷ்ணன்... மாட்டுத்தாவணி போகும் அரசு பஸ் வர... ஓடிப்போய் ஏறினார். அவரைப் போலவே 3 இளைஞர்களும் போதையுடன் ஏறினர். அவர்கள் முகத்தில் முரட்டுத் தனம் முகாமிட்டிருந்தது. அப்போது மணி இரவு 9.45 என்பதால் பஸ்ஸில் அதிக கூட்டமில்லை.
கடைசி சீட்டில் கிருஷ்ணன் உட்கார... ஏறிய இளைஞர்களும் கிருஷ்ணாவின் இரண்டு பக்கத்திலும் நெருக்கியடித்து உட்கார்ந்துகொண்டு... ""டேய் உன் செல்போன் ரெண்டையும் மரியாதையா கொடுடா. இல்லே வெட்டுப்பட்டுத்தான் சாவே'' என்றனர் மிரட்டலாய்.
கிருஷ்ணாவோ ""தர முடியாது''’என்றபடி தன் சட்டைப் பையிலும் கையி லும் இருந்த இரண்டு செல்போன்களையும் சட்டென தன் சட்டை பனியனுக்குள் போட்டுக்கொண்டான். ""சரி இறங்குடா'' என்றபடி அவர்கள் அவனை இழுக்க.. அவன் திமிறினான். உடனே ஆளாளுக்கு அவனைக் கத்தியால் குத்த.. கிருஷ்ணா அலறியபடியே சாய்ந்தான். பஸ்ஸுக்குள் நடந்த இந்தப் படுகொலை மதுரையையே பகீரில் உறைய வைத்தது.
விசாரணையில் இறங்கிய காக்கிகள் கொலையானவர் யாரெனத் துருவ... கொலையானவர் கிருஷ்ணா என்கிற டிப்ளமா என்ஜினியர் என்பதும்... விமான நிலைய விரிவாக்கப் பணிகளின் டெண்டர் இன்சார்ஜான பாலகிருஷ்ணனின் அலுவலகத்தில் கம்ப்யூட்டர் ஆபரேட்டராக பணிபுரிவதும் தெரியவந்தது.
கிருஷ்ணாவின் அம்மா சுப்புலட்சுமி ""என் மகனுக்கு கல்யாணம் பண்ணி பார்க்கணும்னு நினைச்சிகிட்டு இருந்தேன். அதுக்குள்ள அந்தக் கொலைகாரப் பாவிங்க இப்படி பண்ணிட்டுப் போயிட்டானுங்களே. நான் என்ன பண்ணப் போறேனோ''’’ என்றபடி கதறினார்.
பஸ் பயணிகளை விசாரித்தபோது ""செல் போன்களை கொடுடான்னு கேட்டுத்தான் வெட்டி னானுங்க. அந்தப் பையன்கிட்ட இருந்த செல்போன் களோடதான் அவனுங்க தப்பிச்சிப் போனா னுங்க...''’என்று சொல்ல... செல்போனுக்குள்தான் கிருஷ்ணாவின் மரண ரகசியம் இருக்கிறது என்ற முடிவுக்கு வந்தது போலீஸ்.
இதற்கிடையே கிருஷ்ணாவின் அலுவலகத்தில் போலீஸ் டீம் தீவிரமாக விசாரித்தபோது “""வெளியில் பார்வைக்கு டிப்டாப்பான ஆண்மாதிரி தெரிஞ்சாலும் கிருஷ்ணா ஒரு திருநங்கை''’’ என்று குண்டுபோட்ட ஊழியர்கள்...’’""எங்க ஆபீஸில் தனியா தங்கி வேலை பார்க்கும் ஒரு கிளுகிளு லேடி கம்யூட்டர் ஆப்பரேட்டருக்கும்... எங்க ஆபீஸ் இன்சார் ஜுக்கும் தொடர்பு உண்டு. ஒருநாள் அவங்க சல்லா பிச்சதை இந்த கிருஷ்ணா செல்போன்ல படம்பிடிச்சி மிரட்டிவந்ததா தகவல். அதேபோல் இங்க இருக்கும் பாலாஜிக்கும் ரமேஷுக்கும்கூட அந்தப் பொண்ணோட நெருக்கம். அவங்களையும் அவன் படம் எடுத்ததா பேசிக்கிறாங்க''’என்று அதிரடித் தகவலைத் தர.. போலீஸ் டீம் உஷாரானது. அலுவலக இன்சார்ஜ் பால கிருஷ்ணன் சொந்த ஊரான நாகர்கோயிலுக்குப் போயி ருப்பதாக அவர்கள் சொல்ல... அவர் செல்போனோ ஸ்விட்ச் ஆஃபில் இருந்தது.
அவர் பெயரை சிவப்புப் பேனாவால் அண்டர் லைன் பண்ணி... அவரைக் குறிவைத்து ஒரு டீம் நாகர்கோயில் விரைந்தது. கிருஷ்னாவின் அலுவலக அறையை குடைந்தபோது செக்ஸ் பட சி.டி.க்களும் செக்ஸ் புத்தகங்களும்தான் கிடைத்தன. இதற்கிடையே அந்த கிளுகிளு பெண்ணையும் பாலாஜி மற்றும் ரமேஷையும் ஸ்டேஷனுக்குத் தூக்கிப்போய் போலீஸ் விசாரிக்க... ""எனக்கும் எங்க இன்சார்ஜ் சாருக்கும் தொடர்பு இருப்பது உண்மைதான்.
கிருஷ்ணா எப்பப் பார்த்தாலும் யாரையாவது படம் எடுத்துக்கிட்டே இருப்பான். அதை நானே பலதடவை கண்டிச்சிருக்கேன். ஆனா யாரோடவெல்லாம் என்னைப் படம் எடுத்தான்னு தெரியாது. எனக்கும் அவன் கொலைக்கும் சம்பந்தமே இல்லை''’என்று அழுதாள் கிளுகிளு லேடி.
பாலாஜியும் ரமேஷும் ""அந்த கிருஷ்ணா தன் செல்போன்ல எங்க சாரையும் அந்தப் பொண்ணையும் படம் எடுத்து வச் சிருந்ததை எங்கக்கிட்டக் காட்டி னான். அதனால் அந்தப் பொண்ணு மேல சபலமான நாங்க... உன் படத்தை பார்த்துட்டோம்னு சொல்லியே எங்க ஆசைகளுக்கு அவளைப் படியவச்சோம். அதேபோல் கிருஷ்ணா திரு நங்கை என்பதால் அவனையும் ஆசை களுக்கு அடிக்கடி பயன்படுத்திக்கிட் டோம். நாங்க மட்டு மல்ல.. எங்க ஆபீ ஸில் பலபேர் அவனைத் தொட் டிருக்காங்க. ஆனா அவன் கொலைக்கும் எங்களுக்கும் சம்பந்தம் இல்லை. கொலைசெய்யும் அளவுக்கு நாங்க தைரியசாலியும் கிடையாது''’என்று கண்ணைக் கசக்கினார்கள்.
நாகர்கோயிலில் இருந்து அள்ளிவரப்பட்ட அலுவலக இன்சார்ஜ் பாலகிருஷ்ணனோ, "" “எங்க அம்மாவுக்கு கண் ஆபரேசன். அதுக்காகத்தான் போனேன். அன்னைக்கு சார்ஜ் இல்லாததால் செல்போன் ஆஃப் ஆய்டிச்சி. அவன் என்னையும் அந்தப் பொண்ணையும் படம் எடுத்திருப்பதாச் சொல்லி சம்பளத்தை அதிகமா கொடுக்கும்படி மிரட்டுனது உண்மைதான்.
அந்தப் பொண்ணோட விருப்பத்தின் பேரில் நான் தொட்டதால் படத்தைப் பத்தி நான் கவலைப்படலை. சத்தியமா நான் கொலை செய்யலை. எங்களை சந்தேகப்படுறதை விட்டுட்டு... உண்மையான குற்வாளிகளை கண்டுபிடிங்க சார்''’என்றார் திரும்பத் திரும்ப.
கிருஷ்ணாவின் செல்போனை கண்டுபிடித்துவிட்டால் துப்பு கிடைத்துவிடும் என முடிவு கட்டிய போலீஸ் டீம்... அவனது செல் நம்பரை வைத்து... அவன் வைத்திருந்த செல்போனின் ஐ.எம்.ஐ. நம்பரை கண்டுபிடித்தது.
அந்த நம்பருக்குரிய போன் எங்கே இருக்கிறது என செல் டவர் மூலம் துழாவியபோது... இண்டிகேட்டர் மதுரை மீனாட்சி பஜார் பகுதியைக் காட்டியது. அங்கே துருவியபோது 60- ஆம் நம்பர் கடையில் கிருஷ்ணாவின் செல்போன் இருப்பது தெரிந்தது. கடையில் இருந்த ஆனந்த், "“டீ.சர்ட்-ஜீன்ஸ் போட்ட 20 வயசுப் பையன் ஒருத்தன் வித்துட்டுப்போனான் சார். கூடவே இன்னொரு போனையும் வித்தான்'’என்றபடி 2 செல்போன்களை கொடுத்தார்..
அந்த செல்போன்களில் ஒன்றின் டிஸ்பிளேயில் ஒரு இளைஞனின் படம் தெரிய... “அட இவன் கொஞ்ச வருஷத் துக்கு முன்ன கொல்லப்பட்ட கருப்பாயூரணி ரவுடி பாண் டியாச்சே’’ என ஒரு காக்கி உற்சாகத்தில் துள்ளினார். அந்த போனில் இருந்த மெமரி கார்டில் சில குழந்தைகள், கிழவிகள் படங்கள் மட்டுமே இருந்தன. இன்னொரு செல்போனில் மெமரி கார்டே இல்லை.
உடனே கருப்பாயூரணி ரவுடி பாண்டியின் உறவினர்களைத் தேடிப்போன காக்கிகள்... இதெல்லாம் யார் படங்கள் எனக் கேட்டு சம்பந்தப்பட்டவர்களை நெருங்கியது. போட்டோவில் இருந்தவர்களோ "இதையெல்லாம் எடுத்தது இதே ஏரியாவில் இருக்கும் மகாமுனிதான்'’’ என்று சொல்ல... ’அவன் ரவுடிப் பயலாச்சே. அவன்மேல் ரெண்டு மூன்று வழக்கெல்லாம் இருக்கே’’ என்றபடி... அந்த மகாமுனியை நெருங்கினர். வீட்டில் நல்ல தூக்கத்தில் இருந்த மகாமுனியை மடக்கிய காக்கிகள் "எதுக்குடா அந்த கிருஷ்ணாவை கொன்னே'’என செமையாய் கவனிக்க... ’’""அடிக்காதீங்க.. உண்மையைச் சொல்லிடறேன்.
அவனை எங்களுக்கு முன்ன பின்ன தெரியாது. நானும் என் காலேஜ்ல படிக்கும் நண்பர்கள் முனீஸ்வரன், செல்வம் ஆகியோரும் அன்னைக்குத் தண்ணியடிச்சிட்டு... சினிப்பிரியா தியேட்டர்ல படம் பார்க்கலாம்னு போய்க்கிட்டு இருந்தோம். அப்ப செத்துப்போன கிருஷ்ணா... தெற்கு வாசல் பஸ் ஸ்டாண்டில் ஒரு மாதிரியா நின்னுக் கிட்டு கையில் இருந்த செல்போனை காட்டி.. "இதில் பலான படமெல்லாம் இருக்கு. வரீங்களா ஜாலியா இருக்கலாம்'னு எங்களைக் கூப்பிட்டான்.
அவன் திருநங்கைன்னு புரிஞ்சிக்கிட்ட நாங்க... முதல்ல வேணாம்னு சொன்னோம். அவன் கிளம்பிட்டான். அப்பதான் சரி... அவன்கிட்ட இருக்கும் செல்போன் களையும் பணத்தையும் பிடுங்கிக்கிட்டு... அவனை அனுபவிச்சிட்டு துரத்தி விட்டுடுலாம்னு அதே பஸ்ஸில் அவசரமா ஏறினோம். "செல்போனைக் கொடுடா என்ன இருக்குன்னு பாக்கலாம். கீழ இறங்குடா எங்கயாவது போலாம்'னு கூப்பிட்டோம்.
அவன் செல்போனைத் தரமாட்டேன்னு அடம்பிடிச்சான். அப்ப போதையில் இருந்த நான் கோபத்தில் கையில் இருந்த கத்தியால் லேசா அவனைக் குத்த..... அவன் திருப்பி அடிக்க ஆரம்பிச்சான். அதனால் என் நண்பர்களும் அவனைக் கத்தியால் குத்த ஆரம்பிச்சிட்டாங்க. அவன் அலறிச்சாய... படார்னு நாங்க பஸ்ஸில் இருந்து இறங்கி ஓட ஆரம்பிச் சிட்டோம். இதுதான் சார் நடந்தது''’’ என்றபோது...
""அடப்பாவிகளா 2 செல்போன்களை அபகரிக்கவா இப்படி கொலை பண்ணினீங்க? அதுக்குள்ள பல ஆங்கிள்ல விசாரிச்சி.. தலை கிறு கிறுத்துப்போய் நிக்கிறோம்''’’ என்று அப்படியே ரெண்டு நிமிடம் உட்கார்ந்து விட்டார்கள் காக்கிகள்.
கிருஷ்ணாவின் செல்போனில் இருந்த மெமரி கார்டை கைப்பற்றி ஆராய்ந்தபோது... மதுரையில் உள்ள இண்டர்நெட் செண்டர் சில்மிஷக் காட்சியும்... வேனுக்குள் ஒரு பெண் சட்டை கழற்றும் காட்சியும் மட்டுமே இருந்தன.
கிருஷ்ணாவின் மர்டரை விசாரிச்ச எங்களுக்கு... அவனோட அலுவலகத்தில் நடக்கும் லீலைகள் பத்தின தகவல் அதிரவச்சிது. சரி... செக்ஸ் படம் எடுத்து மிரட்டிய விவகாரத்தில்தான் கிருஷ்ணா கொல்லப்பட்டிருக்கான்னு நினைச்சி மேலும் துருவினா... கடைசியில் உப்புப் பெறாத விஷயத் துக்காக அவனை கொன்னுருக்கானுக.
தான் வேலை பார்த்த அலுவலகத்தில்... கிருஷ்ணா செல்போன்ல எடுத்ததா சொல்லப்பட்ட படங்கள் எதுவும் எங்களுக்குக் கிடைக்கலை. எங்களை எங்கெங்கோ கொண்டுபோய் கிறுகிறுக்க வச்சிடுச்சு இந்த வழக்கு''’என்கிறார் ஏ.சி.வெள்ளதுரை.
இப்படி போற போக்குல கூடவா கொல்லுவாக... மதுரை ஆளுக?.
No comments:
Post a Comment